மகாராணா பிரதாப் வானூர்தி நிலையம்
![]() மகாராணா பிரதாப் வானூர்தி நிலையம்[4] (Maharana Pratap Airport) என்பது இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள உதயப்பூருக்கு வானூர்தி சேவை செய்யும் விமான நிலையமாகும். இது உதயப்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் கிழக்குப் பகுதியில் உள்ள தடபோக்கில் அமைந்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் உள்ள மேவார் மாகண மகாராணா (ஆட்சியாளர்) மகாராணா பிரதாப்பின் நினைவாக இந்த விமான நிலையம் பெயரிடப்பட்டது. 1957ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி விமானி அசுதோசு திவாரியால் 4 இருக்கைகள் கொண்ட இலகுரக வானூர்தி தரையிறக்கப்பட்ட போது இந்த விமான ஓடுதளம் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.[5][6] வானூர்தி நிலையத்தின் புதிய பயணிகள் முனையம் பிப்ரவரி 2008 முதல் செயல்படத் தொடங்கியது. கட்டமைப்புஉதயப்பூர் வானூர்தி நிலையம் 504 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[4] வானூர்தி நிலையம் 08/26, 9000 அடி/ 2743 மீட்டர் நீளம் மற்றும் 45 மீட்டர் அகலம் கொண்ட ஒரு நிலக்கீல் ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இதன் 250 க்கு 150-மீட்டர் ஓடுபாதையில் ஒரே நேரத்தில் 3 போயிங் 737 அல்லது ஏர்பஸ் ஏ320 விமானங்களுக்கு நிறுத்தும் இடத்தை வழங்குகிறது. புதிய முனையக் கட்டிடம், 12175 சதுர மீட்டர் பரப்பளவில், ₹ 800 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. முனையத்தில் இரண்டு பயணம் செய்யக்கூடிய பாதைகள், 4 பயணிச் சோதனையிடல்களுடன் 600 பயணிகளைக் கையாளக் கூடிய திறனுடன் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தொலைவு அளக்கும் கருவிகள், அதி உயர் அதிர்வெண் பலதிசை வரம்பு மற்றும் திசை அல்லாத கலங்கரை விளக்கங்கள் போன்ற நவீன வழிசெலுத்தல் மற்றும் தரையிறங்கும் கருவிகள் உள்ளன. ஓடுபாதை 26யில் கேஏடி-I வானொலி அலை இறங்கு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.[7] விமான நிறுவனங்கள் மற்றும் இலக்குகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia