மன்னார் நகரசபை
மன்னார் நகரசபை (Mannar Urban Council, மன்னார் நகராட்சி மன்றம்) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, சாவகச்சேரி நகரசபைக்கு 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 16 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்மன்னார் நகரசபைக்குப் பின்வரும் 7 வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:[3]
தேர்தல் முடிவுகள்2011 உள்ளூராட்சித் தேர்தல்2011 மார்ச் 17 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 16 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
2018 தேர்தலில், மன்னார் நகரசபைக்குத் தலைவராக ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (இதக), துணைத் தலைவராக சூசை செபஸ்ரீயான் ஜோன்சன் (இதக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] 2025 உள்ளூராட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5] 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 16 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் மன்னார் நகரசபையின் தலைவராக டானியல் வசந்தன் (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி), துணைத் தலைவராக நூர் முகம்மது முகம்மது உசன் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia