மலேசியப் பொதுத் தேர்தல்![]() மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநிலப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.[1] தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரைப் பிரதமர் அல்லது பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக்கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[2] தேசியப் பொதுத் தேர்தல்மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது. ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மாமன்னரின் அனுமதியுடன் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சரவாக் சட்டமன்றப் பொதுத் தேர்தல்கடந்த காலங்களில் பாரிசான் நேசனல் எனும் தேசிய முன்னணிக் கட்சியே ஆளும் கட்சியாக வெற்றி வாகை சூடி வந்துள்ளது. 14 அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பே தேசிய முன்னணிக் கட்சியாகும். இதன் தலையாய பங்காளிக் கட்சிகளாக மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும் மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் சம்பிரதாயம் ஆகும். இதில் சரவாக் மாநிலம் மட்டும் விதிவிலக்கானது. அந்த மாநிலத்தின் சட்டமன்றப் பொதுத் தேர்தல், தேசியப் பொதுத் தேர்தல் சமயத்தில் நடைபெறுவது இல்லை. தனியாக வேறு ஒரு நாளில் சரவாக் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறும். மலேசியப் பொதுத் தேர்தல் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia