மலாயா பொதுத் தேர்தல், 1955
மலாயா கூட்டமைப்பின் கூட்டரசு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு கூட்டரசு மலாயாவின் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய மலாயாவின் உயர் ஆணையரால் நியமிக்கப்பட்டனர். பொது
மலாயாவின் 52 கூட்டரசு தொகுதிகளின் ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் மலாயாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 136 மாநிலத் தொகுதிகளிலும் மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றன. மேலும் 10 அக்டோபர் 1954 முதல் நவம்பர் 12, 1955 வரையில்; மலாக்கா, பினாங்கு நீரிணை குடியேற்றங்களில் மாநில ஆட்சிமன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப் பதிவுகளும் நடைபெற்றன. மலேசிய இசுலாமிய கட்சி (பாஸ்), இந்த 1955-ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே உருவாக்கப்பட்டது. முன்னதாக மலேசிய இசுலாமிய கட்சி ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு எனும் அம்னோ கட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. தீபகற்ப மலாயாவில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த மலாயா தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களான கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை அடித்தளமாகக் கொண்டு மலேசிய இசுலாமிய கட்சி உருவாக்கப்பட்டது. மலேசிய இசுலாமிய கட்சி இசுலாத்தை முதன்மை நோக்கமாக அறிவித்து மலாய் மக்களின் ஆதரவைப் பெற்றது.[1] புதிய அரசாங்கம்அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மற்றும் மலேசிய இந்திய காங்கிரசு ஆகியவற்றின் கூட்டணியான மலேசிய கூட்டணி கட்சிக்கு இந்தத் தேர்தலில் அமோகமான வெற்றி கிடைத்தது. முன்னாள் அம்னோ தலைவர் ஒன் ஜாபார் தலைமையிலான நெகாரா கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு மாபெரும் தோல்வியில் முடிந்தது. ஒன் ஜாபார் கட்சியினர் எந்த ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதன் பின்னர் மலேசிய கூட்டணி கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்கத் தொடங்கியது; அதன் தலைவர் துங்கு அப்துல் ரகுமான் முதலமைச்சரானார். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெறும் வரையில் மலாயா நாட்டின் தலைவர் முதல்வர் என்றே அழைக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் முப்பது மலேசிய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 10,000 வாக்குகளுக்கும் மேல் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றனர். அவர்களில் ஒன்பது பேர் 20,000 வாக்குகளுக்கும் மேல் பெரும்பான்மையைப் பெற்றனர். எதிரணிகளைச் சேர்நந் நாற்பத்து மூன்று பேர் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனர். தேர்தல்கள்கூட்டரசு மலாயா சட்டமன்றம்
மாநிலத் தேர்தல்
நீரிணை குடியேற்றங்கள்
முடிவுகள்மலாயா கூட்டணி மொத்த வாக்குகளில் 80% பெற்றது; மற்றும் போட்டியிட்ட 52 இடங்களில் 51 இடங்களில் வெற்றி பெற்றது. மலேசிய இசுலாமிய கட்சி பேராக் மாநிலத்தின் கிரியான் தொகுதியில் மட்டும் ஒரே இடத்தை வென்றது. மலேசிய இசுலாமிய கட்சியின் ஒரே வெற்றி வேட்பாளரான அஜி அகமத் துவான் உசைன், ஓர் இசுலாமிய அறிஞர் ஆகும்; பின்னர் இவர் "திருவாளர் எதிர்க்கட்சி" எனும் செல்லப் பெயரைப் பெற்றார். 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலில் 82.8% மொத்த வாக்குகள் பதிவாகின.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia