மலாயா பொதுத் தேர்தல், 1959
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மலாயாவில் நடைபெற்ற தேசிய அளவிலான மூன்றாவது தேர்தல் இதுவாகும். 1963-இல் சபா, சரவாக், சிங்கப்பூர் ஆகிய மூன்று பிரதேசங்களுடன் மலாயா இணைந்து மலேசியாவை உருவாக்கியது. பொது
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 14 மாநிலங்களில்; 11 மாநிலங்களில் உள்ள 282 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக், சிங்கப்பூர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை. இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான மலாயா கூட்டணி கட்சி மொத்த 104 இடங்களில் 74 இடங்களைப் பெற்றது. மலாயா கூட்டணி கட்சிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 51.77%. எதிர்க்கட்சிகள் 48% வாக்குகளுடன் 30 இடங்களைப் பெற்றன. மலாயாவின் அரசியலமைப்பின்படி 71% பெரும்பான்மை பெற்ற மலேசிய கூட்டணி கட்சி ஆட்சியை அமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, 1959 மே 20 முதல் சூன் 24 வரையில் மலாயாவின் 11 மாநிலங்களில் உள்ள 282 மாநிலத் தொகுதிகளிலும் மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றன. திராங்கானு மற்றும் கிளாந்தான் மாநிலங்களின் நிர்வாகங்களை மலேசிய இசுலாமிய கட்சி கைப்பற்றிக் கொண்டது மலேசியப் பொதுத் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[2] தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[3] மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது. ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காலவரிசைகள்மக்களவை
மாநில சட்டமன்றங்கள்
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia