மலேசிய தரைப்படை
மலேசிய தரைப்படை ஆங்கிலம்: Malaysian Army; மலாய்: Tentera Darat Malaysia) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் பெரிய பிரிவாகும். மலேசியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. மலேசியத் தரைபடை மலேசிய தற்காப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மலேசிய இராணுவத்தில் மலேசிய தரைப்படை மட்டும் ‘அரச’ என்ற பட்டத்தைப் பெறவில்லை. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைகள் மற்றும் படைப்பிரிவுகளுக்கு ‘அரச’ பட்டம் வழங்கப்படுகிறது. மற்ற மலேசிய கடற்படை; மலேசிய வான்படை ஆகிய இரு படைகளும் ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன. சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் தலைமைத் தளபதியாக பொறுப்பு வகிக்கிறார். வரலாறு1 மார்ச் 1861-இல், பினாங்கு தன்னார்வ ரைபிள் பிரிவு (Penang Volunteer Rifle) எனும் பெயரில் மலேசியாவின் முதல் இராணுவப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1915 முதல் 1936 வரை மற்றும் ஒரு பிரிவு இயங்கியது. அதன் பெயர் மலாயா மாநிலங்களின் தன்னார்வ ரைபிள் பிரிவு (Malay States Volunteer Rifle). 1933 ஆம் ஆண்டு சனவரி 23-ஆம் தேதி, மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமை மன்றம், மலாய் படையணி (Malay Regiment) சட்ட முன்வரைவை நிறைவேற்றியபோது நவீன மலேசிய இராணுவப்படை தோன்றியது. அதைத் தொடர்ந்து, மார்ச் 1, 1933-இல், 25 இளைஞர்களைக் கொண்டு மலாய் இராணுவத்தில் ஒரு தற்காலிகப் பிரிவு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர்இந்தப் படைப்பிரிவு 1 சனவரி 1938-இல் மலாயா சிப்பாய் படைப்பிரிவின் முதல் படைத்துறைப் பிரிவு என முழு படைத்துறைப் பிரிவாகத் தொடர்ந்தது. மலாயாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, 1941 டிசம்பர் 1 அன்று இரண்டாம் படையணி நிறுவப்பட்டது. இந்த இரண்டு படைத்துறைப் பிரிவுகளும் சப்பானிய இராணுவத்திற்கு எதிரான போரில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. போருக்குப் பிறகு, நாடு கம்யூனிச அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. மற்றும் 1948-இல் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது. 1950 வாக்கில் மலாயா சிப்பாய் படைப்பிரிவின் பலம் ஏழு படைத்துறைகளாக அதிகரிக்கப்பட்டது. அமைப்புஉத்திசார்ந்த அமைப்பு![]() மலேசியத் தரைப்படையில் தற்போது 18 படைப்பிரிவு (Corps) மற்றும் படை அணிகள் (Regiments) உள்ளன. இவை 3 முக்கிய கூறுகளாக தொகுக்கப்பட்டுள்ளன;
ஐந்து பெரும் பிரிவுகள்மலேசிய தரைப்படையின் அனைத்துப் பிரிவுகளும் மற்றும் படை அணிகளும் தற்போது ஐந்து பெரும் பிரிவுகளாக (Divisions) உள்ளன. இந்த ஐந்து பிரிவுகளில் 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது பிரிவு எனும் மூன்று பிரிவுகளும் தீபகற்ப மலேசியாவில் மேற்கு கள இராணுவ தலைமையகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு பிரிவுகளான 1-ஆவது பிரிவு மற்றும் 5-ஆவது பிரிவு; கிழக்கு மலேசிய போர்னியோவை அடிப்படையாகக் கொண்டவை. அவை கிழக்கு கள இராணுவ தலைமையகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 21-ஆவது சிறப்பு சேவைக் குழு (இராணுவத்தின் சிறப்புப் படைகள்), 10-ஆவது வான்குடை படைப்பிரிவு மற்றும் இரண்டு இராணுவ விமானப் படைப்பிரிவுகள் சுதந்திரமான அமைப்புகளாகும். தரவரிசை அமைப்புமலேசிய இராணுவம் பிரித்தானிய இராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட தரவரிசை அமைப்பைப் பயன்படுத்துகிறது. மலேசிய இராணுவ தரவரிசை அமைப்பு அடிநிலை (Private) முதல் ஜெனரல் (General) வரை 17 நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த தரவரிசைகள் 2 முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அதிகாரி (Officer); மற்றும் பிற தரவரிசைகள் (Other Ranks). இதில் படைத்துறைப் பணி வகிக்காத அதிகாரி (Non-Commissioned Officer) தரவரிசைகள் அடங்கும்.[3] இராணுவத் தரவரிசைபடைப் பிரிவுகள்மலேசியத் தரைப்படை 18 படைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: இந்த 18 படைப்பிரிவுகள் போர் துருப்புக்கள், போர் ஆதரவு துருப்புக்கள் மற்றும் ஆதரவுப் படைகள் என பிரிக்கப்பட்டு உள்ளன: ![]() ![]() ![]() ![]() போர்ப் படை
போர்முனை ஆதரவுப் படை
ஆதரவுப் படை
தயார்நிலைக் குழு
சிறப்புப்பணிக் குழு
வான் தரைப்படை அணி![]() மலேசியத் தரைபடை ஆங்கிலம்: Army Air Corps; மலாய்: Pasukan Udara Tentera Darat) அரச மலேசிய விமானப்படை அதிகாரிகளைக் கொண்டு இந்த வான் தரைப்படை அணி இயங்குகிறது. வான் தரைப்படை அணி ஒரு புதிய அணியாகும். இந்த அணி போக்குவரத்துத் திறன், வான் ஆதரவு, இலகுரக உலங்கூர்திகளைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது போன்ற செயல்களுக்குப் பொறுப்பு வகிக்கிறது.. இந்த அலகு தற்போது மூன்று படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
வான் தரைப்படை அணியின் படைத் தளம் ஜொகூர், குளுவாங் நகர்ப் பகுதியில் உள்ளது. 2019-ஆம் ஆண்டில், இந்த வான் அணியில் 10 அகசுதாவெசுட்லேண்ட் AW109 இலகுரக உலங்கூர்திகள்; மற்றும் 14 சிகோர்சுகி S61A-4 நடுத்தர உலங்கூர்திகள்; கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.[7][8] 882 வான் படைப்பிரிவில் அதன் பழைய சிகோர்சுகி S61A-4 க்கு பதிலாக புதிய சிகோர்சுகி UH-60 பிளாக்ஆக் உலங்கூர்திகளைப் பெற்றது. அதே வேளையில், 2022-ஆம் ஆண்டில், 883 வான் படைப்பிரிவில் 6 MD530G ரக இலகு ரக உலங்கூர்திகள் சேர்க்கப்பட்டன.[9][10] மலேசிய தரைப்படையின் தளவாடங்கள்தகரிகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia