கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BKI, ஐசிஏஓ: WBKK); (ஆங்கிலம்: Kota Kinabalu International Airport (KKIA); மலாய்: Lapangan Terbang Antarabangsa Kota Kinabalu) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு மாநகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம், சபா மாநிலத்தின் மேற்கு கரை மக்களுக்கும்; உட்பகுதி மக்களுக்கும்; வானூர்திச் சேவையை வழங்கும் வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவை; வெளிநாட்டுச் சேவை என இரு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. 2020-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 2,302,514. அதே வேளையில் 41,724 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. நகர மையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. (5.0 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. பொதுகோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திற்குப் பிறகு மலேசியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் என்றும்; போர்னியோ தீவின் பரபரப்பான விமான நிலையம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த வானூர்தி நிலையம், ஆசியா-பசிபிக் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய வானூர்தி மையங்களுக்கு நல்ல இணைப்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நடுத்தர அளவிலான வானூர்தி நிலையம். வரலாறு1943-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர் இராணுவத்தால் இந்த வானூர்தி நிலையம் கட்டப்பட்டது. ஓர் இராணுவ வானூர்தி நிலையமாக தன் வரலாற்றைத் தொடக்கியது.[1] அப்போது அது ஜெசல்டன் வானூர்தித் திடல் (Jesselton Airfield) என்று அழைக்கப்பட்டது. ஜெசல்டன் என்று கோத்தா கினாபாலு அப்போது அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாட்டுப் படைகளால், இந்த வானூர்தி நிலையம் கடுமையான குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகியது. மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்போருக்குப் பிறகு, வடக்கு போர்னியோவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (Department of Civil Aviation - DCA) விமான நிலையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை எடுத்துக் கொண்டது. வடக்கு போர்னியோ என்பது இப்போதைய சபா மாநிலம் ஆகும். வழக்கமான பயணிகள் சேவை 1949 மே மாதம் தொடங்கியது. சிங்கப்பூரில் இருந்து கூச்சிங் மற்றும் லபுவான் வழியாக மலாயன் ஏர்வேஸ் வானூர்தி (Malayan Airways) நிறுவனத்தின் மூலமாக அந்தச் சேவையைத் தொடக்கப்பட்டது. கெத்தே பசிபிக் வானூர்தி நிறுவனம்இந்த மலாயன் ஏர்வேஸ் வானூர்தி சேவை, பின்னர்க் காலத்தில் மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Malaysia–Singapore Airlines) என்று பெயர் மாற்றம் கண்டது. இந்தச் சேவை, செப்டம்பர் 1949-இல் சண்டக்கான் வரை நீட்டிக்கப்பட்டது.[2] 1950-ஆம் ஆண்டு வாக்கில் கெத்தே பசிபிக் வானூர்தி நிறுவனம், ஹாங்காங் மணிலா சேவையைத் தொடங்கியது. அப்போது அந்த நிறுவனத்தின் விமானங்களுக்கான நிறுத்தமாக இந்தக் கோத்தா கினபாலு வானூர்தி நிலையம் செயல்பட்டது.[3][4] ஓடுபாதை மறுசீரமைக்கப்பு1953-ஆம் ஆண்டில், சபா ஏர்வேஸ் லிமிடெட் (Sabah Airways Limited) நிறுவனத்தின் மூலமாக ஓர் உள்நாட்டு விமானச் சேவை உருவாக்கப்பட்டது. அந்தச் சேவையில் சண்டக்கான், கூடாட், ரானாவ், கெனிங்காவ், தாவாவ் ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டன.[5] 1957-ஆம் ஆண்டில், அசல் புல்வெளி ஓடுபாதை ஆஸ்பால்ட் பொருட்களால் மறுசீரமைக்கப்பட்டது. மற்றும் ஒரு புதிய முனையம் கட்டப்பட்டது.[6] வரலார்றுத் தடங்கள்1959-ஆம் ஆண்டில், ஓடுபாதை 1,593 மீட்டராக நீட்டிக்கப்பட்டது 1963-ஆம் ஆண்டில், ஓடுபாதை மேலும் வலுப்படுத்தப்பட்டு 1,921 மீட்டராக நீட்டிக்கப்பட்டது. 1970 - 1980-ஆம் ஆண்டுகளில், ஓடுபாதையின் மறுபுறத்தில் ஒரு புதிய முனையக் கட்டிடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து வணிக விமானங்களும் இந்த புதிய முனையத்திற்கு மாற்றப்பட்டன. பின்னர், அசல் முனையம் ஏர்போர்ட் லாமா சாய்ந்த எழுத்துக்கள்(Airport Lama) ("பழைய விமான நிலையம்") என அறியப்பட்டது. 1992-ஆம் ஆண்டில், கோத்தா கினபாலு வானூர்தி நிலையத்தின் நிர்வாகம்; மற்றும் செயல்பாடுகள்; மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனத்தின் கீழ் வந்தன. போக்குவரத்து புள்ளிவிவரங்கள்Traffic
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia