ஜொகூர் அரச இராணுவப் படை
ஜொகூர் அரச இராணுவப் படை (ஆங்கிலம்: Royal Johor Military Force (JMF); மலாய்: Askar Timbalan Setia Negeri Johor; சீனம்: 柔佛御林军) என்பது ஜொகூர் மாநிலத்தின் அரச பாதுகாப்புப் படை; மற்றும் ஜொகூர் சுல்தானின் தனியார் அரசக் காவலர் படையும் ஆகும். மலேசியாவில் இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான இராணுவப் பிரிவு; மற்றும் மலேசியாவில் ஒரு மாநில அரசால் பராமரிக்கப்படும் ஒரே இராணுவப் படையும் ஆகும்.[3][2] இந்தப் பாதுகாப்புப் படை ஜொகூர் சுல்தானின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதன் தலைமையகம் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராகிம் முகாமில் அமைந்துள்ளது.[4] பொது1946-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பில் ஜொகூர் மாநிலம் இணையும் போது தன்னுடைய அரச பாதுகாப்புப் படையைத் தக்க வைத்து கொள்ள முடியும் எனும் துணை விதி, மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது.[5] மலேசிய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணை (Ninth Schedule of the Constitution of Malaysia), மலேசிய நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவப் படைகளுக்கு மலேசிய கூட்டாட்சி அரசாங்கம் மட்டுமே பொறுப்பு என்று கூறுகிறது.[6] எந்த வகையான அவசரகாலம்; மற்றும் ஆயுத மோதல்களின் போது மலேசிய ஆயுதப் படைகளின் கீழ் ஜொகூர் அரச பாதுகாப்புப் படை ஈடுபடும்.[7] நவீன இராணுவப் படை1886-ஆம் ஆண்டு நவீன ஜொகூரின் முதல் சுல்தானான சுல்தான் அபு பக்கரின் ஆட்சியின் போது ஜொகூர் அரச பாதுகாப்புப் படை நிறுவப்பட்டது.[8] மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மற்றும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் அமைப்புகளில், ஜொகூர் மாநிலம் மட்டுமே அதன் நவீன இராணுவப் படையைக் கொண்ட முதல் மற்றும் ஒரே மலாய் மாநிலம் ஆகும். அந்தக் காலக்கட்டத்தில் வேறு எந்த மலாய் மாநிலமும் அதன் சொந்த இராணுவத்தைக் கொன்டிருக்கவில்லை.[3] ஆங்கிலோ-ஜொகூர் உடன்படிக்கை1885-ஆம் ஆண்டு சுல்தான் அபு பக்கர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா ஆகியோரால் இலண்டன், ஐக்கிய இராச்சியத்தில் ஆங்கிலோ-ஜொகூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் அடிப்படையில், அமைதியை நிலைநாட்டவும், வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து சிங்கப்பூர், ஜொகூர் பிரதேசங்களைப் பாதுகாக்கவும் அந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.[9] அதன் பின்னர் ஜொகூர் அரச இராணுவப் படை தோற்றுவிக்கப்பட்டு; இன்று வரையில் செயல்பாட்டில் உள்ளது. இந்தப் படையின் தளபதியாக ஜொகூர் சுல்தான் பொறுப்பு வகிக்கிறார்.[10] மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia