குளுவாங் வானூர்தி நிலையம்
குளுவாங் வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMAP) (ஆங்கிலம்: Kluang Airport மலாய்: Lapangan Terbang Kluang) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டம், குளுவாங் நகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையத்தை கேம் மக்கோத்தா (Kem Mahkota) என்றும் அழைப்பது உண்டு.[2] தற்போது, குளுவாங் வானூர்தி நிலையத்தில் ஒரு முனையம் (Terminal) மட்டுமே உள்ளது. இந்த நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமானச் சேவைகள் இல்லை. திட்டமிடப்பட்ட விமானச் சேவைகள் இல்லாததால், குளுவாங் வானூர்தி நிலையத்திற்குச் செல்லும் போது பயணிகள் தங்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்கள்.[3] பொதுஇந்த வானூர்தி நிலையம் குளுவாங் நகர மையத்தில் இருந்து வடமேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது மலேசிய இராணுவத்தின் 881-ஆவது விமானப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர். வரலாறு1940-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலாயா இராணுவத்திரால் இந்த வானூர்தி நிலையம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களிடம் வீழ்ந்த பிரித்தானிய மலாயாவின் கடைசி வானூர்தி நிலையம் இதுவாகும். சிங்கப்பூரில் இருந்து சுமத்திரா வரையிலான வான்வழித் தாக்குதல்களுக்கு ஜப்பானியப் படைகளால் இந்த வானூர்தி நிலையம் பயன்படுத்தப்பட்டது. 1995-ஆம் ஆண்டில் மலேசிய விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருந்து மலேசிய இராணுவ விமானப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சான்றுகள்
மேலும் காண்கபுற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia