மாலிப்டினம் ஈராக்சைடு
மாலிப்டினம் ஈராக்சைடு (Molybdenum dioxide) என்பது MoO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். மாலிப்டினம் டையாக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஊதா நிற திண்மமான இச்சேர்மம் ஓர் உலோகக் கடத்தியாகும். ஒற்றைச்சரிவு செல்லில் படிகமாகும் மாலிப்டினம் ஈராக்சைடு, உருக்குலைந்த உரூத்தைல் (TiO2) படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தைட்டானியம் டை ஆக்சைடில் (TiO2) ஆக்சைடு எதிர்மின் அயனிகள் நெருங்கிப் பொதிந்துள்ளன. தைட்டானியம் அணுக்கள் பாதிக்கு மேலான எண்முக துகள்வெளிகளை ஆக்ரமித்துள்ளன. மாங்கனீசு டை ஆக்சைடில் (MoO2) எண்முகங்கள் உருக்குலைந்துள்ளன. மாலிப்டினம் அணுக்கள் மையத்தில் இருப்பதில்லை. அவை Mo – Mo இடைவெளியை குறைவு நீளமென நிலைமாற்றிக் கொள்ளவும் Mo – Mo பிணைப்புக்கும் முனைகின்றன. குட்டையான Mo – Mo இடைவெளி 251 பைக்கோமீட்டர் ஆகும். இது உலோகத்திலுள்ள Mo – Mo 272.5 பைக்கோமீட்டர் என்ற இடைவெளியைவிடக் குறைவு ஆகும். ஓர் ஒற்றைப் பிணைப்புக்கு எதிர்நோக்கும் தேவையான பிணைப்பு நீளத்திற்கு இது குறைவாகும். பிணைப்பு சிக்கலானதாகவும் சில மாலிப்டின எலக்ட்ரான்கள் கடத்தல் பட்டையில் உள்ளடங்காமல் உலோகக் கடத்துத் திறனில் பங்கு கொள்கின்றன. தயாரிப்பு
2 MoO3 + Mo → 3 MoO2
அயோடினைப் பயன்படுத்தி மாலிப்டின ஈராக்சைடின் ஒற்றைப் படிகங்களை உருவாக்கலாம். அயோடின் மாலிப்டின ஈராக்சைடினை மறுதலையாக ஆவியாகும் வேதியினமான MoO2I2 ஆக மாற்றுகிறது [1]. மாலிப்டினம் ஆக்சைடு தொழில்நுட்ப மாலிடினம் ஆக்சைடின் ஆக்கக் கூறாக உள்ளது. MoS2:வைத் தயாரிக்கும் தொழிற்சாலை செயன்முறையில் தொழில்நுட்ப மாலிப்டினம் ஆக்சைடு உருவாகிறது [2][3]. 2 MoS2 + 7O2 → 2MoO3 + 4SO2 MoS2 + 6MoO3 → 7MoO2 + 2SO2 2 MoO2 + O2 → 2MoO3 MoO2 ஆல்ககால்களில் ஐதரசன் நீக்கம் செய்கிறது [4]. ஐதரோகார்பன்களை மீள் உருவாகம் [5] செய்கிறது. உயிரிடீசலாகவும் பயன்படுகிரது [6]. கிராபைட்டு மீது இதைப் படிய வைத்து மாலிப்டினம் மீநுண் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன [7]. இச்சேர்மத்தின் கனிமவியல் வடிவம் துகாரினோவிட் அரிதாகக் காணப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia