மாலிப்டினம் ஈரார்சனைடு (Molybdenum diarsenide) MoAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். மாலிப்டினம் தனிமத்தின் ஆர்சனைடு உப்பு என்று இது கருதப்படுகிறது. Mo2As3, மற்றும் Mo5As4 என்பவை மாலிப்டினத்தின் இதர ஆர்சனைடுகளாகும்.[2][3]
மாலிப்டினம் ஈரார்சனைடு கருப்பு நிறத் திண்மமாகப் படிகமாகிறது.[1] மற்றும் 0.41 கெல்வின் கடத்துத் திறன் கொண்ட ஒரு மீக்கடத்தியுமாகும்.[4] 12 என்று எண்ணிடப்பட்ட இடக்குழுவில் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது.[5] மாலிப்டினம் இருபாசுபைடு போன்ற அதே கட்டமைப்பை கொண்டுள்ளது. செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலம் அல்லது ஐதரசன் பெராக்சைடில் இது கரையாது. ஆனால் நைட்ரிக் அமிலம், சூடான செறிவூட்டப்பட்ட கந்தக அமிலம் மற்றும் இராச திராவகம் ஆகியவற்றில் எளிதில் கரையும்.[6]