மாலிப்டினம் நாற்குளோரைடு(Molybdenum tetrachloride) என்பது MoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இச்சேர்மம், பல்பகுதிய ("α") அமைப்பு , அறுபகுதிய ("β") அமைப்பு ஆகிய இரண்டு பல்லுருவ அமைப்புகளில் காணப்படுகிறது. ஆயினும், எந்த அமைப்பிலும் இச்சேர்மம் தாழ்நிலையை அடையாமல் எந்தக் கரைப்பானிலும் கரைவதில்லை. ஒவ்வொரு பல்லுருவ அமைப்பிலும், இரண்டு விளிம்புநிலை குளோரைடு ஈனிகள் மற்றும் நான்கு இரட்டைப்பால ஈனிகளுடன் மாலிப்டின மையங்கள் எண்முகவடிவில் இணைந்துள்ளன[1].
↑E. L. Mccann III, T. M. Brown "Molybpenum(IV) Chloride" Inorganic Syntheses 1970, volume 12, pages 181-186. எஆசு:10.1002/9780470132432.ch31
↑Jonathan R. Dilworth, Raymond L. Richards "The Synthesis of Molybdenum and Tungsten Dinitrogen Complexes" Inorganic Syntheses 1990, volume 28, pages 33-43. எஆசு:10.1002/9780470132593 10.1002/9780470132593