300 °செல்சியசு வெப்பநிலையில் (572 °பாரங்கீட்டு) மாலிப்டினம் உலோகமும் அதிகப்படியான அயோடினும் நேரடியாக வினை புரிந்தாலும் மாலிப்டினம்(III) அயோடைடு உருவாகும்.
2 Mo + 3 I2 → 2 MoI3
மாலிப்டினம்(III) அயோடைடு மாலிப்டினத்தின் மிக உயர்ந்த நிலைப்புத்தன்மை கொண்ட அயோடைடு என்பதால் இதுவே விரும்பத்தக்க தயாரிப்புப் பாதையாகும்.
பண்புகள்
மாலிப்டினம்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் காற்றில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும் ஒரு கருப்பு எதிர்காந்த திண்மமாகும். வெற்றிடத்தில், இது 100 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மாலிப்டினம்(II) அயோடைடு மற்றும் அயோடினாக சிதைகிறது. இது முனைவு மற்றும் முனைவற்ற கரைப்பான்களில் கரையாது.[2] இதன் படிக அமைப்பு சிர்க்கோனியம்(III) அயோடைடுடன் சமகட்டமைப்பு கொண்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
↑Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1019–1021. ISBN0080379419.