மாலிப்டினம் நைட்ரைடு

மாலிப்டினம் நைட்ரைடு
இனங்காட்டிகள்
12033-31-7 N
InChI
  • InChI=1S/2Mo.N
    Key: CXDXWLBOICIIHQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Mo].[Mo].[N]
பண்புகள்
Mo2N
வாய்ப்பாட்டு எடை 205.91 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறத் திண்மம்
அடர்த்தி 9.06 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாலிப்டினம் நைட்ரைடு (Molybdenum nitride) என்பது Mo2N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் மற்றும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. தாண்டல் உலோக நைட்ரைடுகளின் குடும்பத்தைச் சேர்ந்ததாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு வினையூக்கியாகவும் பூச்சுப் பொருளாகவும் பயன்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் பண்புகளை வெளிப்படுத்துகிறது.

பண்புகள்

Mo2N பொதுவாக அறுகோணம் (hcp) மற்றும் கனசதுர (fcc) கட்டமைப்புகள் உட்பட பல படிக வடிவங்களில் உள்ளது.[1] இதன் பண்புகள் தொகுப்பு முறை, விகிதவியல் தன்மை மற்றும் படிக அமைப்பு போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். மாலிப்டினம் நைட்ரைடின் பொதுவான பண்புகள் பின்வருமாறு:

தயாரிப்பு

மாலிப்டினம் நைட்ரைடை பல்வேறு முறைகள் மூலம் தயாரிக்க முடியும்.[2][3]

நேரடி நைட்ரைடேற்றம்: மாலிப்டினம் உலோகம் உயர்ந்த வெப்பநிலையில் நைட்ரசன் வாயுவுடன் வினைபுரிந்து Mo2N சேர்மத்தை உருவாக்குகிறது.

அம்மோனியா பகுப்பு: மாலிப்டினம் ஆக்சைடுகள் அல்லது மாலிப்டேட்டுகள் போன்ற மாலிப்டினம் முன்னோடி சேர்மங்களை அம்மோனியா வாயு அல்லது அம்மோனியா கொண்ட கரைசல்களுடன் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்து மாலிப்டினம் நைட்ரைடை உருவாக்கலாம்.

வேதியியல் நீராவி படிவு: மாலிப்டினம் நைட்ரைடு மெல்லிய படலங்கள் மற்றும் பூச்சுகளை வெப்ப வேதியியல் நீராவி படிவு அல்லது பிளாசுமா-மேம்படுத்தப்பட்ட வேதியியல் நீராவி படிவு போன்ற வேதியியல் நீராவி படிவு நுட்பங்களைப் பயன்படுத்தி அடி மூலக்கூறுகளில் மாலிப்டினம் நைட்ரைடைப் படிய வைக்கலாம்.

பயன்கள்

அம்மோனியா தயாரித்தல் உட்பட பல்வேறு தொழில்துறை செயல்முறைகளில் மாலிப்டினம் நைட்ரைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மாலிப்டினம் நைட்ரைடு அம்மோனியா தொகுப்புக்கான ஏபர்-போசு செயல்பாட்டில் வினையூக்க செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. அங்கு இது வழக்கமான இரும்பு அடிப்படையிலான வினையூக்கிகளுக்கு மாற்றாக செயல்படுகிறது.[4]

மேற்கோள்கள்

  1. Jauberteau, Isabelle; Bessaudou, Annie; Mayet, Richard; Cornette, Julie; Jauberteau, Jean Louis; Carles, Pierre; Merle-Méjean, Thérèse (December 2015). "Molybdenum Nitride Films". Coatings 5 (4): 656–687. doi:10.3390/coatings5040656. 
  2. Lilić, Aleksandra; Cardenas, Luis; Mesbah, Adel; Bonjour, Erik; Jame, Patrick; Michel, Carine; Loridant, Stéphane; Perret, Noémie (30 November 2022). "Guidelines for the synthesis of molybdenum nitride: Understanding the mechanism and the control of crystallographic phase and nitrogen content". Journal of Alloys and Compounds 924: 166576. doi:10.1016/j.jallcom.2022.166576. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S092583882202967X. 
  3. "Original Synthesis of Molybdenum Nitrides". ACS Publications. doi:10.1021/acs.chemmater.0c01369. S2CID 219739192.
  4. Kojima, Ryoichi; Aika, Ken-Ichi (2001). "Molybdenum nitride and carbide catalysts for ammonia synthesis". Applied Catalysis A: General 219 (1–2): 141–147. doi:10.1016/S0926-860X(01)00676-7. Bibcode: 2001AppCA.219..141K. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0926860X01006767. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya