மின்னாம்பள்ளி ஊராட்சி, புதுச்சத்திரம்
மின்னாம்பள்ளி ஊராட்சி (Minnampalli Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3] இந்த ஊராட்சி, நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [4] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர். நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையில் இரண்டு கல் தொலைவில் இவ்வூர் அமைந்திருக்கிறது. பள்ளி என்னும் பொதுக்கூறு இதன் பெயரில் உள்ளது. பள்ளி என்பதற்குக் காரணம் சமண முனிவர்கள் வசித்த இடம் எனவும் கால்நடைகள் நிறைந்திருந்த இடம் எனவும் இருவகையாகக் குறிப்பிடுவர். மின்னாம் என்பதை மின்+ஆம் எனப் பிரிக்கலாம். மின் எனில் மின்னமரம் எனக் குறிக்கப்படும் ஒரு மரத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மின்னமரங்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் இந்தச் சிறப்புக்கூறு உருவாகியிருக்கலாம். இங்கு உடையார், பறையர், அருந்ததியர், கொங்கு வேளாளக் கவுண்டர் ஆகிய சாதியினர் மிகுதியாக வசிக்கின்றனர். இவ்வூரில் முக்கியத் தொழில் உழவே ஆகும். சேகோ பேக்டரி எனப்படும் ஜவ்வரிசி ஆலைகள் நான்கு உள்ளன. மாரியம்மன், காமாட்சியம்மன், அங்காள பரமேஸ்வரி எனப்படும் பெரியாண்டவன் ஆகிய கடவுள்களின் கோயில்கள் உள்ளன. சிறப்பான கலையரங்கம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது. அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[4]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[5]:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia