முகைனி சைனல் அபிதீன்
முகைனி சைனல் அபிதீன் (பிறப்பு: 12 நவம்பர் 1961) (ஆங்கிலம்: Noorainee binti Abdul Rahman) என்பவர் மலேசியாவின் மலேசியப் பிரதமர் டான் ஸ்ரீ இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) அவர்களின் மனைவி ஆவார். இசுமாயில் சப்ரி யாகோப் மார்ச் 2020 முதல் ஆகத்து 2021 வரை; மலேசியாவின் 8-ஆவது பிரதமராகவும், 21 ஆகத்து 2021 முதல்24 நவம்பர் 2022; மலேசியாவின் 9-ஆவது பிரதமராகவும், சூலை 2021 முதல் ஆகத்து 2021 வரை முன்னாள் துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர் ஆவார்.[1][2] வாழ்க்கை1979-ஆம் ஆண்டில், முகைனிக்கு 18 வயதாக இருக்கும் போது இசுமாயில் சப்ரி யாகோப்புடன் நட்பு கொண்டார்.[3] பின்னர் 1986-இல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்; மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்.[2][4][5] குடும்பம்இவர்களின் மகன்களில் ஒருவரான கடாபி இசுமாயில் சப்ரி (Gadaffi bin Ismail Sabri), ஒரு கலைஞர் ஆவார். அவர் 2007-ஆம் ஆண்டு அகாடமி பென்டாசியா என்ற நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர்களின் ஒரே மகள் நினா சப்ரினா (Nina Sabrina), ஜோவியன் மண்டகி (Jovian Mandagie) என்ற இந்தோனேசிய ஆடை வடிவமைப்பாளரை 2013-ஆம் ஆண்டில் மணந்தார்.[4][5] ஆனால் ஆகத்து 2023-இல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.[6] விருதுகள்மலேசிய விருதுகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia