நஜீப் ரசாக்
முகமது நஜிப் பின் துன் அஜி அப்துல் ரசாக் (Mohd Najib bin Tun Haji Abdul Razak; சீனம்: 纳吉·阿都拉萨; பிறப்பு: சூலை 23, 1953) என்பவர் மலேசியாவின் அரசியல்வாதியும் மலேசியாவின் ஆறாவது பிரதமரும் ஆவார். 2004 சனவரி 7 ஆம் நாளில் இருந்து மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த இவர் 2009, ஏப்ரல் 3 ஆம் நாளில் இருந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நஜிப் துன் ரசாக் மலேசியாவின் 2-ஆவது பிரதமர் அப்துல் ரசாக் உசேன் மகனாவார். மலேசியாவில் மிகவும் இளம் வயதில் மலேசிய மக்களவையின் முதல் நபர் என்ற பெருமையும் நஜீப்புக்கு உண்டு. தந்தையின் மறைவைத் தொடர்ந்து 22-ஆம் வயதில் பெக்கான் மக்களவைத் தொகுதியின் இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொது2018 மே 9-ஆம் தேதி வரை இவர் மலேசியாவின் 6-ஆவது மலேசியப் பிரதமராகப் பொறுப்பு வகித்தார். 14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மலேசிய மக்களவையில் அதிகப் பெரும்பான்மையைத் தக்கவைக்கத் தவறினார். அதைத் தொடர்ந்து பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஆட்சி மாற்றம் நடந்தது. பின்னர் மகாதீர் பின் முகமது 7-ஆவது மலேசிய பிரதமராக 10 மே 2018-இல் பதவியேற்றார். 2018 சூலை 3-இல், நஜீப் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். 1எம்டிபி என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய எஸ்ஆர.சி இண்டர்நேசனல் எனும் நிறுவனத்தில் இருந்து RM 42 மில்லியன் ($ 10.6 மில்லியன்) பணம் நஜீப்பின் வங்கிக் கணக்கிற்குள் சேர்க்கப் பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.[2][3] நம்பிக்கை மற்றும் பணமோசடிஇது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், அதிகார வன்முறை, நம்பிக்கை மற்றும் பணமோசடி குற்றவியல் மீறல் மற்றும் 1எம்டிபி நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கையில் தலையீடு போன்ற பல குற்றச்சாட்டுகள் நஜீப் மீது சுமத்தப்பட்டன.[4][5][6][7] 2020 சூலை 28-இல், அதிகாரத் தவறாகப் பயன்படுத்தியது, பணமோசடி உட்பட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி என்று மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதலாவது மலேசியப் பிரதமராக நஜீப் அறிவிக்கப்பட்டார்,[8][9] இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரிங்கிட் 210 மில்லியன் தண்டமும் அறிவிக்கப்பட்டது.[10][11] தொடக்க கால வாழ்க்கைஇவர் 23 சூலை 1953-யில் புக்கிட் பியூஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள பகாங் மாநில செயலாளர் இல்லத்தில் பிறந்தார். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக்கின் மூத்த மகனாவார். இவரது கடைசி தம்பியானவர் மலேசியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பூமிபுத்ரா-கொமெர்ஸ் ஓல்ட்டிங்ஸ் பெர்காட் நிறுவனத்தின் நிருவாகியாவார். இவர் தன் தொடக்கக் கால கல்வியை கோலாலம்பூர் சென்ட் ஜான்ஸ் கல்விக் கழகத்தில் பயின்றார். பின்னர் இங்கிலாந்திலுள்ள மல்வேர்ன் காலேஜ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். 1974-ஆம் ஆண்டு, நொட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இவர் தொழில்நுப்ப பொருளாதார துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். நாட்டிற்குத் திரும்பிய பின் இவர் மலேசிய நடுவண் வங்கியிலும் பின்னர் அரசாங்க நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்திலும் (Petronas) பணியாற்றினார். அரசியல் கொள்கைகள்இவரின் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியாவில் சில முக்கிய அரசியல் கொள்கைகள் மாற்றம் கண்டன. அவற்றுள் முக்கியமானவை GST என அழைக்கப்படும் பொருள் சேவை வரி 1 ஏப்ரல் 201-5இல் தொடங்கப்பட்டது. பிரிம் (BR1M) என அழைக்கப்பட்ட மக்கள் உதவித் தொகை திட்டத்தையும் இவர் தொடக்கி வைத்தார்.[12][13] ஒரே மலேசியா (1Malaysia) எனப்படும் தேசிய நிலைக் கொள்கையை 16 செப்டம்பர் 2008-இல் அறிமுகப்படுத்தினார்.[14] மலேசியர்களிடையே ஒற்றுமை, நல்லொழுக்கம், சிறந்த அடைவுநிலை போன்ற நற்பண்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த ஒரே மலேசியா கொள்கை வரையப்பட்ட்து. TN50 தூரநோக்கு கொள்கையையும் இவர், 2017-ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை மலேசிய மக்களவையில் தாக்கல் செய்யும் போது அறிமுகப் படுத்தினார். இது முந்தைய தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வாவாசான் 2020 (wawasan 2020) கொள்கையைத் தவிர்க்கும் வகையில் அமைந்ததாகப் பலர் குற்றம்சாட்டினர்.[15] சர்ச்சைகள்ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1MDB) எனப்படும் முதலீட்டு நிறுவனத்தை 2009-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். மலேசியர்கள் சராசரி வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இருப்பினும் 2016 வரை உலக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிதி மோசடிக்கு இந்த 1எம்டிபி வழிவகுத்தது. 2009-ஆம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகளில் இந்த 1எம்டிபி நிறுவனம் 42 பில்லியன் மலேசிய ரிங்கிட் கடன்சுமைக்கு ஆளானது. 2 சூலை 2015-இல் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) ரிங்கிட். 2.672 பில்லியன் 1MDB நிறுவனத்தின் கணக்கில் இருந்து நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது.[16] இந்தச் செய்தியை வெளியிட்டதிற்காக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது வழக்கு தொடுக்கப் போவதாக நஜிப் அறிவித்தார். இருந்த பொழுதும் இதுவரை நஜிப் அப்படி எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்யவில்லை. தொடக்கத்தில் தன் வங்கிக் கணக்கில் இந்தப் பணம் செலுத்தப் பட்டதை மறுத்த போதும்; பின்னர் இந்தப் பணம் தமக்கு அரபு அரசக் குடும்பத்தினரால் பரிசாகக் கொடுக்கப் பட்டதாக அறிவித்தார். வழக்கு விசாரணை3 ஜூலை 2018 ல் இவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். எஸ். ஆர். சி. இன்டர்நேசனல் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து நஜிப்பின் சொந்த வங்கி கணக்கிற்கு ரி.ம. 42 மில்லியன் (USD 10.6 மில்லியன்) தொகை மாற்றப்பட்ட விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.[17][18] மறுநாள் 4 சூலை 2018-இல் நஜிப் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்தார். பிறகு ரி.ம. 1 மில்லியன் உத்திரவாத தொகையில் விடுவிக்கப்பட்டார்.[19] 19 செப்டம்பர் 2018-இல் நஜீப், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் விசாரணையில் இருந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டார். 1MDB நிறுவன விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அவர் 2013-ஆம் ஆண்டு பெற்ற ரிங்கிட் 2.6 பில்லியன் நன்கொடை சம்பந்தப்பட்ட வழக்கிற்காகவும் கைது செய்யப்பட்டார். அதற்கும் மறுநாள், செப்டம்பர் 20, 2018-இல், கோலாம்பூர் உயர் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக 25 குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டன. அவற்றை மறுத்து நஜீப் விசாரணை கோரினார். பின்னர் ரிங்கிட் 3.5 மில்லியன் உத்தரவாதப் பிணையில் விடுவிக்கப்பட்டார். குற்றச்சாட்டுகள்2020 சூலை 28 இல் மலேசிய உயர் நீதிமன்றம் ஏழு குற்றங்களில் இவரைக் குற்றவாளியாக அறிவித்தது.[20][21] மொத்தம் 42 குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன; 35 குற்றங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படவில்லை.[22] அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ம.ரி.210 மில்லியன் தண்டமும் அறிவிக்கப்பட்டது. ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கு 10 ஆண்டுகள் (ஒரே நேர) சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டம் செலுத்தத் தவறினால், மேலும் 5 ஆண்டுகள் சிறையில் அவர் சிறையில் கழிக்க வேண்டி இருக்கும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.[10][11] ஒவ்வொரு மாதமும் முதலாவது மற்றும் ஐந்தாவது நாட்களில் அவர் காவல்துறையினரைக் காண வேண்டும்; மற்றும் ரிங்கிட் 2 மில்லியன் கூடுதல் தண்டத்துடன் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.[23] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia