முதல் அலை பெண்ணியம்
முதல் அலைப் பெண்ணியம் (First wave feminism) என்பது பெண்ணிய இயக்கத்தின் முதல் காலகட்டத்தைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் பெண்களின் சட்ட உரிமைகளை, குறிப்பாக பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முதல் அலைப் பெண்ணியமாகக் கருதப்படுகிறது. மார்த்தா இலியர் நியூயார்க் டைம்சு இதழில் 1968 இல் முதல் அலைப் பெண்ணியம், இரண்டாம் அலைப் பெண்ணியம் ஆகிய சொற்களை முதலில் பயன்படுத்தினார்[1][2] அப்போது இந்த இயக்கம், முந்தையப் பெண்ணியர்களிடம் இருந்து பெண் சமனின்மைகளுக்காகப் போராடியது. தோற்றம்மிரியம் சுனையர் கூற்றுப்படி, சீமோன் தெ பொவாயர் தன் பாலினத் தற்காப்புக்காக தனது பேனாவை கையிலெடுத்த முதல் பெண் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தைன் தெ பிசான் ஆவார் எனக் கூறியுள்ளார்.[3] ஈன்ரிச் கார்னேலியசு அக்ரிப்பா,மாதேசுத்தா தி ஃபோர்சி ஆகியோர் 16 ஆம் நூற்றாண்டில் பணிபுரிதனர்.[3] ஆன்னி பிராதுசுட்டிரீட், பிராங்குவா பவுலைன் தெ இலா பாரே ஆகியோரின் பாலினங்களின் சமனிலை எனும் நூல் 1673 இல் வெளிவந்தது.[3] மேரி வுல்சுட்டோன்கிராஃப்ட் எழுதிய காலம் உரூசோ, அறிவொளிக்கால மெய்யியலாலும் உர்க்கொண்ட்தாகும். முறுமலர்ச்சிக்கால மக்களாட்சித் தந்தை கருத்தியலான பாகுபாடற்ற ஆண், பெண் சமனிலையோடு வாழும் குறிக்கோள்நிலைச் சமூகத்தை வரையறுத்தார். வுல்சுட்டோன்கிராஃப்ட் , அவரது சம காலத்தினர் பெண்களை விவாதத்தில் விலக்கியதை உரூசோ சுட்டிக் காட்டினார். பின்னர் வுல்சுட்டோன் உரூசோவின் எண்ணக்கருக்களைப் பின்பற்றி எழுதினார்.[4] முதலில் இவர் கருத்து உ+ஊசோவுடன் முரண்பட்டாலும், வுல்சுட்டோன்கிராஃப்ட் உரூசோவின் சமூகத்தைப் பாலின சமனிலையை இணைத்து விரிவாக்கினார். வுல்சுட்டோன்கிராஃப்ட் 1972 இல் மகளிர் உரிமைக்கான மறுப்பு]] எனும் தன் முதல் பெண்ணிய நூலை வெளியிட்டார். இந்நூலில் இவர் தனது 1790 இல் வெளியிட்ட சிறுநூலை விரிவாக்கி பால்களுக்கான சமூக, அறவியல் சமமைக்காக வாதிட்டார். இவர் பிறகு ஆடவர் உரிமைக்கான மறுப்பு எனும் புதினத்தையும் எழுதினார். அடுத்த அவரது முடிவுறாத புதினம், (Maria: or, The Wrongs of Woman|Maria) பெண்களின் குற்றங்கள் வன்மையான விவாதத்துக்கு உள்ளாகியது. இதில் இவர் பெண்களின் பாலியல் அவாக்களை வெளியிட்டிருந்தார். இவர் இளமையிலேயே இறந்தார். அவரது கணவர் வில்லியம் கோத்வின் எனும் மெய்யியலாளர் ஆவார். இவர் வுல்சுட்டோன்கிராஃப்ட்டினது வாழ்க்கையின் மலரும் நினைவுகளி வெளியிட்டார். இது வுல்சுட்டோன்கிராஃப்டின் புகழை, இவர் நினைத்தமைக்கு மாறாக, பின் தலைமுறைகளிடையே குறைத்துவிட்டது. வுல்சுட்டோன்கிராஃப்ட் பிரித்தானிய பெண்னிய இயக்கத்தின், பெண்ணிய வரலாற்றின் அன்னையாகப் போற்ரப்படுகிறார். இவரது எண்ணக்கருக்கள் பெண்வாக்குரிமைப் போராளிகளின் சிந்தனையை வென்றெடுத்தது.[5] தொடக்கநிலை அமெரிக்க முயற்சிகள்அமெரிக்காவின் தொடக்கநிலைப் பெண்ணியம் ஒழிப்புவாத இயக்கத்தோடு தொடர்பு கொண்டதாகவே அமைகிறது. இதன் விளைவாக பல பெயர்பெற்ற பெண்ணியர்களும் செயல்முனைவாளர்களும் உருவாகினர். தொடக்கநிலைப் பெண்ணியர்களில் சிலராக, சொயவுமர் டிரூத், எலிசபெத் பிளாக்வெல், ஜேன் ஆல்டன், டோரத்தி டே ஆகியோரைக் கூறலாம்.[6] முதல் அலைப் பெண்ணியம் முதன்மையாக வெள்ளையின நடுத்தர வகுப்பு மகளிரால் நடத்தப்பட்டது; பிற கருப்பின, மகளிர் இரண்டாம் அலைப் பெண்னியக் காலத்தில் தான் குரல்கொடுக்கத் தொடங்கினர்.[7] அக்காலத்தின் அரசியல் விளக்கச் சொல்லாக பெண்ணியம் எனும் சொல் உருவாக்கப்பட்டது. பெண்ணியம் சம்னிலை வாய்ந்த சீர்திருத்த மக்களாட்சிப் பேச்சுகளால் பெண்ணிய இயக்கம் உருக்கொண்டது.[8]
![]() கல்விசுவீடன் வாக்குரிமைப் போராட்டத்தில் இளம்பெண்களுக்கான கல்வி முதன்மை வகித்தது. தம் அடையாளத்தைத் தற்காத்துக் கொல்லவும் சொந்தத் திறமைகளை நிறுவவும் சமூகத்தில் பொதுக்கல்வி, குறிப்பாக இளம்பெண்களுக்கான கல்வி இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அமெரிக்க மாநில அரசுகளும் சட்டங்களும்அமெரிக்க மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்த இறையாண்மை அமைப்புகளாகும்;[9] இவை ஒவ்வொன்றுக்கும் தனி அரசியல் அமைப்புச் சட்டங்களும் மாநில அரசுகளும் மாநில நீதிமன்றங்களும் உண்டு. அனைத்து மாநிலங்களுக்கும் சட்டத்தை இயற்றும் சட்டமன்றக் கிளைகளும், மாநிலச் சட்ட அதிகாரத்தைச் செயற்படுத்தும் செயாண்மைக் கிளைகளும் மாநிலச் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் பயன்படுத்தும், விளக்கும், அல்லது சிலவேளைகளில் அவை இரண்டையும் வட்டார சட்ட ஆணைகளையும் கவிழ்க்கும் நீதிமன்றக் கிளைகளும் உள்ளன. கூட்டாட்சி அரசியல் அமைப்பு, கூட்டாட்சி சட்டங்கள், கூட்டாட்சி மேலவை பின்னேற்புதரும் பன்னாட்டு உடன்படிக்கைகள் மீறாத வகையில் மாநிலங்கள் சட்டமியற்றும் இறையாண்மை அதிகாரங்களைக் கொண்டுள்ளன. வழக்கமாக, மாநில உச்சநீதிமன்றங்கள், குறிப்பிட்ட விளக்கம் கூட்டாட்சிச் சிக்கலை உள்ளடக்காதவரையில், மாநில நிறுவனங்கள், மாநிலச் சட்டங்கள் ஆகியவற்றை விளக்கும் அறுதி அமைப்புகளாகும்; அப்படிக் கூட்டாட்சி சார்ந்த சிக்கல் உல்ளடங்கும்போது எடுக்கப்படும் முடிபு ஒன்றிய மாநில உச்சநீதிமன்றத்துக்கு ஒரு தாக்கீதுவழி மேல்முறையீடு செய்து, உரியதொரு உறுதியாணை வழங்க வேண்டப்படும்.[10] அமெரிக்க ஒன்றிய அரசின் விடுதலைக்குப் பிறகு, மாநிலச் சட்டங்கள், பல நூற்றாண்டுகளாக, பேரளவில் ஒற்றைச் சட்ட அமைப்பில் இருந்து விலகிச் சென்றுள்ளன; எனவே, மரபாக மாநிலக் கட்டுபாட்டில் உள்ள பெரும்பாலான சட்ட வகைமைகள், மரபுச் சட்டம், குடும்பச் சட்டம், சொத்துரிமைச் சட்டம், ஒப்பந்தச் சட்டம், குற்றவியல் சட்டம் என 50 வகைத் தனித்தனிச் சட்ட அமைப்புகளாக அமைந்துள்ளன.[11] மேரிலின் சால்மோன் ஒவ்வொரு மாநிலமும் மகளிர் சட்டச் சிக்கல் வகைமைக்களை, குறிப்பாக சொத்துரிமைச் சட்டங்களைப் பல்வேரு வகைமைகளில் உருவாக்கியுள்ளதாக வாதிடுகிறார்.[12] கன்னெக்டிகட் மாநிலம் 1809 இல் மகளிர் உயிலெழுதும் உரிமைச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமானது. நியூயார்க் மாநிலம் 1860 இல் ஒரு திருத்திய மணமான மகளிர் சொத்துரிமைச் சட்டத்தை இயற்றியது; இது மகளிருக்குத் தாம் பெற்ற சிறுவரைச் சொந்தங் கொண்டாடவும் அவர்களின் உயில், சம்பள்லம், சொத்துரிமை ஆகியவற்றில் கருத்து கூறவும் உரிமை நல்கியது.[13] நியூயார்க்கிலும் பிற மாநிலங்களிலும் முன்னேற்றங்களும் பின்னடைவுகளும் ஏறபாட்டபோது ஒவ்வொரு மகளிருக்கான வெற்றியையும் பெண்ணியர்கள் பயன்படுத்தி, கெட்டிதட்டிப்போன சட்ட அமைப்புக்களைக் கையாளக் கற்றனர். காலநிரல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia