இந்தியாவில் பெண்ணியம்
இந்தியாவில் பெண்ணியம் (Feminism in India) என்பது பல இயக்கங்களின் ஒரு தொகுதியாக விளங்குகிறது. இந்த இயக்கங்கள், இந்தியப் பெண்களுக்கான சம உரிமையைப் பற்றி விளக்குவதையும், அவர்களுக்கான சமஉரிமையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் அரசியல், பொருளாதார, மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதும் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இவ்வியக்கங்களின் சீரிய நோக்கமாகும். இந்திய சமூகத்திற்குள் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இதன் குறிக்கோளாகும். உலகின் பிற பாகங்களிலுள்ள அவர்களின் பெண்ணியல் கூட்டாளிகளைப் போலவே இந்தியப் பெண்ணியக்கவாதிகளும் பாலின சமத்துவத்தைக் கோருகிறார்கள்: பெண்களுக்கு ஆணுக்கிணையான கூலியும், சமமான படிப்பும், ஆரோக்கியமும் எளிதில் கிட்டவேண்டும். அரசியலிலும் பெண்களுக்கு சம உரிமை கிட்டவேண்டும்.[1] வாரிசுரிமைச் சட்டங்கள் மற்றும் சதி என்றழைக்கப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் போன்ற இந்திய சமூகத்தின் கலாச்சாரத் தொடர்புடைய சிக்கல்களுக்கு எதிராகவும் இந்தியப் பெண்ணியல்வாதிகள் போராடி வந்திருக்கிறார்கள். இந்தியாவின் பெண்ணியம் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்:
இந்தியாவின் பெண்ணியம் சார்ந்த இயக்கங்கள் வளர்ச்சி கண்டபோதும், இன்றும் இந்த நவீன இந்தியாவில் வாழும் பெண்கள் பல்வேறுவிதமான பாகுபாடு சம்பந்தமான பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் குடும்பத்தலைவருக்குட்பட்ட கலாச்சாராத்தில் பெண்கள் சொத்துரிமைகளைப் பெறுவதும் ஆணுக்கிணையான கல்வியைப் பெறுவதும் போராட்டமாகவே உள்ளது.[4] இத்துடன், கடந்த 20 ஆண்டுகளில், பெண்சிசுக் கருக்கலைப்பு என்ற புதிய பிரச்சனை பெண்ணுக்கெதிராகத் தோன்றியுள்ளது.[5] இந்த அநீதிக்கு எதிராகப் போராடுவதை மிகவும் முக்கியமானதாக இந்தியப் பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.[6] மேற்கத்திய நாடுகளில் உள்ளதுபோல, இந்தியாவிலுள்ள பெண்ணியல் அமைப்புகளைப்பற்றிய விமர்சனங்கள் இங்கும் உள்ளன. இவர்கள் ஏற்கனவே உரிமைகள் பெற்றுள்ள பெண்களின் மேல் மட்டுமே அக்கறை செலுத்துவதாகவும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மற்றும் கீழ் சாதிப் பெண்களை உதாசீனப்படுத்துவதாகவும் விமர்சனத்திற்குள்ளாகினர். இதுவே சாதிவாரியான பெண்ணியக்கங்களும் அமைப்புகளும் தோன்றக் காரணமாய் இருந்தது.[7] இந்தியச் சூழலமைவில் விளக்கம்வரலாறுமுதல் கட்டம்: 1850–1915இரண்டாம் கட்டம்: 1915–19471947-க்குப் பிறகுபிரச்சனைகள்பிறப்பு விகிதம்1991 -லிருந்து 2001-வரையிலான இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் மக்கள்தொகையில் 94.5 சிறுமிகளுக்கு 100 சிறுவர்கள் என்று இருந்த பெண்-ஆண் விகிதம் 92.7 சிறுமிகளுக்கு 100 சிறுவர்கள் என்ற விகிதமாக வீழ்ச்சியடைந்தது.[8] கேரளா போன்ற நாட்டின் சில பகுதிகள் இத்தகைய வீழ்ச்சியை அனுபவிக்கவில்லை. ஆனால், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மற்றும் மகாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் பெண்-ஆண் விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (இந்த மாநிலங்களில் பெண்-ஆண் விகிதம் 79.3 மற்றும் 87.8-க்கு இடைப்பட்டுள்ளது).[8] இது பிறப்பு விகிதப் பாகுபாட்டிற்கு சாட்சியாக விளங்குகிறது. அத்துடன் இது பெண்சிசுக் கருக்கலைப்பு எங்கும் பரவி வருவதைக் குறிப்பதாக உள்ளது. இதன் காரணமாக இந்திய நாடாளுமன்றம் கருவிலேயே பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளும் நுணுக்கங்களுக்குத் தடை விதித்தது. ஆனால் இந்தச் சட்ட அமுலாக்கம் பெருவாரியாக தவிர்க்கப்பட்டு வருகிறது.[5] திருமணம்பெருவாரியான சராசரி இந்தியப் பெண்களின் வாழ்க்கை திருமணத்திலேயே கழிகிறது; இன்றும்கூட சட்டரீதியான திருமண வயதான 18 ற்குள்ளாகவே நிறையப் பெண்கள் திருமணம் புரிந்துகொள்கின்றனர். பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிகழ்வு இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்தியப் பெண்களின் முதிர்ந்த பருவத்தில் குழந்தைப்பேறும் குழந்தை வளர்ப்பும் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகையால், இந்தியப்பெண்கள் வேலைக்குச் செல்லும்போது இந்திய ஆண்களுக்கு பின்தங்கியவர்களாகிவிடுகின்றனர். நகரவாழ் இந்திய ஆண்கள் தங்களது 25 முதல் 29 வயதிற்குள் வேலைக்குச்சென்றுவிடுகின்றனர். ஆனால், நகரவாழ் இந்தியப் பெண்கள் தங்களது 40 அல்லது 44 வயதிலேயே வேலைக்குச்செல்ல முற்படுகின்றனர்.[4] இக்காரணத்தால், வேலைக்குத் தேவையான திறமையைப் பெறுவதில் பெண்களுக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளதால், தங்களின் வேலையில் முன்னேற்றம் காண மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெறுகின்றனர். இந்தியப் பணியாளர்களில் பெணகளின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஆண்களைவிட பெண்கள் தங்களின் படிப்பை ஆரம்பப்பள்ளியுடனோ அல்லது நடுநிலைப்பள்ளியுடனோ நிறுத்திக்கொள்கின்றனர். அத்துடன் ஆண்களைவிட பெண்களின் கல்வி அறிவு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதால், முதலாளிகளும் சட்டத்தை எளிதாக ஏமாற்றுகிறார்கள்- குறிப்பாக பெண்கள் விஷயத்தில். ஏனென்றால், இந்தியக் கலாச்சாரத்தில் ஆணைப் பெண்கள் எதிர்த்துப்பேசுவது கூடாது என்று ஆகிவிட்டது. மேலும், தொழிலாளர் சங்கங்களும் பெண்களின் தேவைகளை உணராமலே உள்ளன. பெண்களும் மனைவியாக, அம்மாவாக, குடும்பத்தலைவியாக வாழ்வதற்கு ஏற்ற வேலைகளுடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவே விரும்புகின்றனர்.[4] இறையியல்இந்துமதப் பெண்ணியம்இஸ்லாமியப் பெண்ணியம்தாக்கம்பத்தொன்பதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், மேலை நாடுகளில் படித்த இந்தியர்கள் சமத்துவத்தை அறிமுகப்படுத்தினார்கள். இருந்தாலும், 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்று தனது ஜனநாயக அரசாங்கத்தைத் தொடங்கும் வரை சமத்துவம் என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கிட்டவில்லை. இந்தியர்களின் வாழ்க்கையில் சமத்துவத்தை செயல்படுத்தும் கொள்கையும் உருப்பெறவில்லை.[9] சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசியலமைப்பு எல்லோருக்கும் சமத்துவத்தை அளித்தது. மதத்தாலோ பாலினத்தாலோ வேறுபாடு காணாத சுதந்திரத்தை அது வழங்கியது. ஒவ்வொருவரின் மதச்சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளித்தது.[10] அத்துடன், ஏழு ஐந்தாண்டுத்திட்டங்கள் பெண்களுக்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பொதுநலன்களை அளிப்பதில் மேம்பாடு கண்டுள்ளது. ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம் பெண்களை "முன்னேற்றத்தில் பங்குதாரர்கள்" என்றுகூட அறிவித்தது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia