தம்பி தங்கக் கம்பி
தம்பி தங்கக் கம்பி 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை கே. சங்கர் இயக்கினார்.[1] கதைச்சுருக்கம்சங்கர் (விஜயகாந்த்) தன்னுடைய தாய் தங்கையருடன், வசித்து வரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நோய்வாய்ப்பட்ட அவருடைய தாயின் நிலைமை மோசமாகி வருவதால், சங்கர் சிறிதுகாலம் தானுந்து ஓட்டுநராக ஒரு வேலையை ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையில், ஒரு மர்மமான பணக்காரப் பெண் கங்கா (இலட்சுமி), அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக சங்கரின் போராடும் குடும்பத்தை அறிந்த கங்கா, சங்கரை வேலைக்கு அமர்த்துகிறார். அவர் கங்காவின் முடிவை ஏற்றுக்கொள்கிறார். பெரியதுரை (இராதா ரவி), ஜம்புலிங்கம் (மலேசியா வாசுதேவன்) ஆகியோரை கங்கா அனுப்பிவைக்கிறார். மேலும் சித்ரா (ரம்யா கிருஷ்ணன்), உமா (ரேகா) ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்தனர். சங்கர் தனது குடும்பப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறார். கங்கா எப்படி சங்கருக்கு உதவுகிறார் என்பது மீதமுள்ள கதை. நடிகர், நடிகையர்
தயாரிப்புதம்பி தங்கக் கம்பி, கே. சங்கர் இயக்கிய ஓர் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தை சங்கராலய பிக்சர்சின் எஸ். கணேஷ் தயாரித்தார். பாடல்கள்இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[2][3]
வெளியீடும் வரவேற்பும்தம்பி தங்கக் கம்பி 1988 சூலை 15 அன்று வெளியிடப்பட்டது.[4] ஒரு வாரம் கழித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதை ஓர் "அழகிய வணிகப் படம்" என்று கேலி செய்தது. ஆனால் இறுதிக்கட்டக் காட்சி "இலட்சியமாகப் படமாக்கப்பட்டது" என்று கூறியது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia