லக்கம்பட்டி
இது பவானி ஆற்றங்ரையில் அமைந்ததுள்ளது. கரும்பு, வாழை, நெல், ஆகியவை முக்கிய விவசாய பயிராகும். கல்வி நிறுவனமான கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அபி மருத்துவமனை இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. அமைவிடம்லக்கம்பட்டி பேரூராட்சிக்கு 40 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 3 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 27 கி.மீ.; வடக்கில் திருப்பூர் 44 கி.மீ.; தெற்கில் தூக்கநாயக்கன்பாளையம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு13.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 132 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,454 வீடுகளும், 11,716 மக்கள்தொகையும் கொண்டது. [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia