லோக் மான்ய திலக்-காரைக்கால்-சிறப்பு விரைவுத் தொடருந்து

லோக் மான்ய திலக்-காரைக்கால்-சிறப்பு விரைவுத் தொடருந்து அல்லது காரைக்கால்-லோக் மான்ய திலக்-சிறப்பு விரைவுத் தொடருந்து (வண்டி எண்: 01017) (ஆங்கிலம்: Mumbai LTT - Karaikal Special Express) என்பது மும்பை லோக் மான்ய திலக் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து காரைக்காலுக்கும், காரைக்காலிலிருந்து மும்பை லோக் மான்ய திலக் சந்திப்புக்கும் (வண்டி எண்: 01018) (ஆங்கிலம்: Karalkal - Mumbai LTT Special Express) என்று இரு வழித்தடங்களில் இயங்கும் வாராந்திர ஒரு சிறப்பு விரைவுத் தொடருந்தாகும். இத்தொடருந்து 1632 கி.மீ பயணத் தொலைவு கொண்ட இந்தத் தொடருந்துச் சேவை அக்டோபர் 27, 2013 முதல் அறிமுகம் செய்யப்பட்டு நாள்தோறும் இயங்கிக் கொண்டிருக்கிறது.[1] இந்தத் தொடருந்து நான்கு மாநிலங்களில் பயணிக்கும் பயண நேரம் 31 மணியும் 35 நிமிடங்களாகும். தானே, கல்யாண், லோனாவிலா, புனே, சோலாப்பூர் வரை மகாராட்டிர மாநிலத்திலும், குல்பர்கா, வாடி, யாத்கிர், ராய்ச்சூர் வரை கர்னாடகா மாநிலத்திலும், மந்த்ராலயம்சாலை, குண்டக்கல், ஹுட்டி, தாடிபட்ரி, யேரகுண்டலா, கடப்பா, ரேணிகுண்டா வரை ஆந்திர மாநிலத்திலும், அரக்கோணம், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிப் புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் வரை தமிழ்நாட்டிலும், உள்ள ஊர்களின் வழியே 291 சிறு நிலையங்களைக் கடந்து 28 முக்கிய நிறுத்தங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து 17 பெட்டிகளில் குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை, குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை, மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை, இரண்டாம் வகுப்பு இருக்கை போன்றவைகளை உள்ளடக்கமாகக் கொண்டு 1,240 பயணயிடங்களைக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. - Mumbai LTT Special Express-01018-/16607 "Mumbai LTT - Karaikal/01017". Indian Railway. Retrieved 26 October 2013. {{cite web}}: Check |url= value (help)
  2. [தொடர்பிழந்த இணைப்பு] No=1& widget content .epaper.in-id-1156715 &code=1855572|accessdate=26 [october 2013

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya