துணி, உணவு பதன்படுத்துதல், எஃகு, மரக்கூழும் தாளும், சணல், கப்பல் கட்டுதல், மருந்துகள், மின்னணுவியல், தானுந்து பாகங்கள், களிமண் பொருட்கள், உரம், கட்டுமானப் பொருட்கள், தோல், இயற்கை வாயு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
துணி, தோல்சரக்கு நுட்பியல் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட, உறைந்த உணவுப் பொருட்கள், பீங்கான், போன் சைனா, பெருங்கடல்-செல்லும் கப்பல்கள், மருந்துகள், மென்பொருள், நுகர்வு சாதனங்கள், சணல், சணல் பொருட்கள், தேநீர்
வங்காளதேசம்அடுத்த பதினொரு வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள வளரும் நாடு ஆகும். அண்மைக்கால கருத்துக்கணிப்பில் வளர்ந்து வரும் நாடுகளிலேயே முதலாளித்துவ கருத்துக்களுக்கு ஆதரவான மக்கள்தொகை உள்ள இரண்டாவது நாடாக கண்டறியப்பட்டுள்ளது.[11]
2004க்கும் 2014க்கும் இடையே வங்காள தேசத்தின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 6% ஆக இருந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்மயத்தால் பொருளாதாரம் வளர்ந்து வந்துள்ளது. துணித்தொழிலில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக வங்காளதேசம் உள்ளது. மருந்துகள், கப்பல் கட்டுதல், மட்கலப் பொருட்கள், தோல்சரக்கு நுட்பியல் பொருட்கள், மின்னணுவியற் பொருட்கள் மற்ற முதன்மையான தொழில்துறைகளாக உள்ளன. உலகின் மிகவும் செழிப்பான பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ளதால் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. நெல், சணல், தேநீர், கோதுமை, பருத்தி, கரும்பு முதன்மை வேளாண் பொருட்களாக உள்ளன. உலகளவில் மீன், கடல் உணவு உற்பத்தியில் வங்காளதேசம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வெளிநாட்டிலுள்ள வங்காளதேசத்தவர்களால் அனுப்பப்படும் பணம் முக்கிய வெளிச்செலாவணி சேமிப்பாக உள்ளது.