பிலிப்பீன்சு பொருளாதாரம் |
---|
நாணயம் | பிலிப்பைன் பெசோ (பிலிப்பினோ: piso; sign: ₱; code: PHP) |
---|
நிதி ஆண்டு | சனவரி 1 முதல் திசம்பர் 31 வரை |
---|
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | ஏபெக், ஆசியான், உ.வ.அ, கிழக்காசிய மாநாடு, ஆசியான் கட்டற்ற வணிகப் பகுதி ( |
---|
புள்ளி விவரம் |
---|
மொ.உ.உ | $284.556 பில்லியன் பெயரளவில் (2014)[1] $692.223 பில்லியன் கொ.ஆ.ச (2014)[1] |
---|
மொ.உ.உ வளர்ச்சி | 5.6% (Q2 2015)[2] |
---|
நபர்வரி மொ.உ.உ | $2,828 (2014)[1] (பெயரளவில் 126வது) $6,986(2014) (கொ.ஆ.ச) [1] |
---|
துறைவாரியாக மொ.உ.உ | 10.03% வேளாண்மை 33.25% தொழில் 56.72% சேவைகள் (2014)[3] |
---|
பணவீக்கம் (நு.வி.கு) | 0.8% (சூலை 2015) |
---|
கினி குறியீடு | 43.0 (2009)[4] |
---|
தொழிலாளர் எண்ணிக்கை | 64.80 மில்லியன் (ஏப்ரல் 2015)[5] |
---|
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | சேவைகள்: 53%, வேளாண்மை: 32%, தொழில்: 15% (2012 மதிப்.)[6] |
---|
வேலையின்மை | 6.4% (ஏப்ரல் 2015)[7] |
---|
முக்கிய தொழில்துறை | மின்னணுவியல் பொருத்துதல், வணிகச் செயலாக்க அயலாக்கம், உடை, கப்பல் கட்டுதல், காலணி, மருந்து, வேதிப்பொருள், மரப் பொருட்கள், உணவுப் பதப்படுத்துதல், பாறைநெய் தூய்விப்பாலை, மீன்பிடித் தொழில் |
---|
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 95வது[8] |
---|
வெளிக்கூறுகள் |
---|
ஏற்றுமதி | $61.81 பில்லியன் (2014)[9] |
---|
ஏற்றுமதிப் பொருட்கள் | குறைக்கடத்திகளும் மின்னணுக் கருவிகளும், போக்குவரத்து கருவிகள், உடை, செப்பு பொருள்கள், பாறைநெய் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பழங்கள் |
---|
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | சப்பான் 19.0% ஐக்கிய அமெரிக்கா 14.2% சீனா 11.8% ஆங்காங் 9.2% தென் கொரியா 5.5% தாய்லாந்து 4.7% (2012 est.)[10] |
---|
இறக்குமதி | $69.16 பில்லியன் (2014)[11] |
---|
இறக்குமதிப் பொருட்கள் | மின்னணு சாதனங்கள், தனிம எரிபொருட்கள், எந்திரத் தொகுதி, போக்குவரத்துக் கருவிகள், இரும்பும் எஃகும், துணி, தானியங்கள், வேதிப் பொருட்கள், நெகிழி |
---|
முக்கிய இறக்குமதி உறவுகள் | ஐக்கிய அமெரிக்கா 11.5% சீனா 10.8% சப்பான் 10.4% தென் கொரியா 7.3%
சிங்கப்பூர் 7.1% தாய்லாந்து 5.6% சவூதி அரேபியா 5.6% இந்தோனேசியா 4.4% மலேசியா 4.0% (2012 est.)[12] |
---|
மொத்த வெளிக்கடன் | $58.5 பில்லியன் (2013)[13] |
---|
பொது நிதிக்கூறுகள் |
---|
பொதுக் கடன் | மொ.உ.உற்பத்தியில் 37.3 % (Q3 2014)[14] |
---|
வருவாய் | $58.97 பில்லியன் (2016 மதிப்.) |
---|
செலவினங்கள் | $65.73 பில்லியன் (2016 மதிப்.) |
---|
பொருளாதார உதவி | $1.67 பில்லியன்[15] |
---|
கடன் மதிப்பீடு |
|
---|
அந்நியச் செலாவணி கையிருப்பு | $85.761 பில்லியன் (சனவரி 2013)[20] |
---|
' |
பிலிப்பீன்சின் பொருளாதாரம் அனைத்துலக நாணய நிதியத்தின் 2014ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களின்படி உலகின் 39வது பெரிய பொருளாதாரமாகும். வெளிப்படும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உள்ளது.[21]
பிலிப்பீன்சு புதியதாகத் தொழில்மயமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது; வேளாண்சார் பொருளாதாரத்திலிருந்து தயாரிப்பு / சேவைகள் சார்ந்தப் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. 2014இல் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படியான மொத்த உள்நாட்டு உற்பத்தி $692.223 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.[22]
குறைகடத்திகளும் மின்னணு கருவிகளும், போக்குவரத்துக் கருவிகள், உடைகள், செப்பு பொருட்கள், பாறைநெய் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பழங்கள் முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. முதன்மை வணிகக் கூட்டாளிகளாக அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், சீன மக்கள் குடியரசு, சிங்கப்பூர், தென் கொரியா, நெதர்லாந்து, ஆங்காங், ஜெர்மனி, சீனக் குடியரசு, மற்றும் தாய்லாந்து நாடுகள் உள்ளன. பிலிப்பீன்சு இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளுடன் புலிக்குட்டிப் பொருளாதாரங்கள் எனப்படுகின்றன. ஆசியாவில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கிடையே உள்ள பரந்த வருமான இடைவெளியும் வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளும் சமூக நீதித் தேவைகளும் முதன்மையான சிக்கல்களாக உள்ளன. ஊழலைக் குறைப்பதும் கட்டமைப்பில் முதலீட்டைப் பெருக்குவதும் வருங்கால வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாகும்.
மேற்சான்றுகள்