நைஜீரியாஆபிரிக்காவின் வடமேற்கிலுள்ள நடுத்தர வருமானமுடைய கலப்புப் பொருளாதாரமாகும். இது இக்கண்டத்தில் தென் ஆபிரிக்காவை அடுத்து இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும். வளர்ந்து வருகின்ற சந்தைப் பொருளாதாரம், விரிவடையும் நிதி, சேவை, தொடர்பாடல், தொழில்நுட்பம், மனமகிழ் சேவைகளைக் கொண்டுள்ள நாடாக விளங்குகின்றது. உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 21வது பெரிய பொருளாதாரமாகவும்கொள்வனவு ஆற்றல் சமநிலைக்குட்பட்ட மொ.உ.உற்பத்தியின் அடிப்படையில் 20ஆவதாகவும் உள்ளது. இங்குள்ள தொழிற்றுறை இக்கண்டத்திலேயே மூன்றாவது பெரியதாக உள்ளது. மேற்கு ஆபிரிக்கப் பகுதியில் தயாராகும் சரக்குகளிலும் சேவைகளிலும் பெரும்பங்கு வகிக்கின்றது. நைஜீரியாவின் தொலைத்தொடர்பு, வங்கி, திரைப்படத்துறைகள் விரைவான வளர்ச்சியைக் காண்கின்றன.[17]
தொடர்ந்து பல்லாண்டுகளாக நிலவிய மேலாண்மைக் குறைபாடுகளைக் களைந்து கடந்த பத்தாண்டுகளாக நைஜீரியா பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இதன் மூலம் தன் முழுமையானத் திறனை அடைந்துள்ளது. நைஜீரியாவின் கொள்வனவு ஆற்றல் சமநிலைக்கு பின்னரான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2000இல் இருந்த $170 பில்லியனிலிருந்து 2012இல் $451 பில்லியனாக, கிட்டத்தட்ட மூன்று மடங்காக பெருகியுள்ளது. கணக்கில் வராத , முறைசாரா துறைகளையும் சேர்த்தால் மெய்யான கணக்கு $630 பில்லியனாகும். எனவே, தனிநபர் உற்பத்தி 2000இலிருந்த $1400 இருந்து 2012இல் $2,800 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 2014இல் அடிப்படையை மாற்றியதால் இவற்றை மீள்கணக்கிட்டு உயர்த்த வேண்டியத் தேவை உள்ளது.[18]