வரதராஜன்பேட்டை
வரதராஜன்பேட்டை (ஆங்கிலம்:Varadarajanpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இது தென்னூர் என்கின்ற மற்றொரு கிராமத்தையும் உள் அடக்கிய பேரூராட்சி ஆகும் வரதராஜன் பேட்டையில் பத்து வார்டுகளும் தென்னூரில் ஐந்து வார்டுகளும் ஆக 15 வார்டுகளை கொண்ட பேரூராட்சி ஆகும். அமைவிடம்வரதராஜன்பேட்டை பேரூராட்சி, அரியலூருக்கு வடகிழக்கே 58 கி.மீ. தொலைவிலும், உடையார்பாளையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு17.79 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2049 வீடுகளும், 8259 மக்கள்தொகையும் கொண்டது. [4][5] வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia