வள்ளத்தோள் நாராயண மேனன்
வள்ளத்தோல் நாராயண மேனன் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் உள்ளூர் பரமேசுவர அய்யர் மற்றும் குமரன் ஆசான் ஆவர். கேரள கலாமண்டலத்தை நிறுவியவர். இந்திய அரசின் பத்ம பூசண் விருது 1955ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. வாழ்க்கை வரலாறு1878 அக்டோபர் 16-அன்று கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர் அருகே சென்னாரா என்றவிடத்தில் பிறந்தார். சமசுகிருதம் மற்றும் ஏரணம் படித்தார். 1905-இல் துவங்கிய வால்மீகி இராமாயண மொழிபெயர்ப்பை 1907-இல் முடித்தார். 1915-இல் சித்திரயோகம் வெளியிட்டார். இக்காவியத்தைப் பாராட்டி இவருக்கு மகாகவி என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. அந்த ஆண்டே கேரளோதயம் இதழின் அதிபரானார். கதக்களியின் மறுமலர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டார். 1958 மார்ச் 13-அன்று தமது 79ஆம் அகவையில் மரணமடைந்தார். அவரது பாடல்கள் நாட்டுப்பற்று மற்றும் சமூகநீதியை வலியுறுத்தி அமைந்திருந்தன. காதுகேளாமையால் தாமடைந்த இன்னல்களையும் கவிதையாக வடிவெடுத்தார். அவரது படைப்புகள்குறிப்பிடத்தக்க சில:
வள்ளத்தோலின் படைப்புகள் ஆங்கிலம்,உருசியன் மற்றும் இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கேரள கலாமண்டலம்வள்ளத்தோல் நாராயணமேனன் மலையாள தொன்ம கலைகளை வளர்த்தெடுக்க ஆற்றிய முதன்மையான பணி கேரளகலாமண்டலம் என்னும் கலாசாலையை நிறுவியதுதான். தமது 49ஆம் அகவையில் தாம் பார்த்த கதக்களி நாட்டிய நாடகத்தின் குறைந்த தரம் அவரை பழங்கலைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியது. உடன்கருத்துக் கொண்டவர்களின் துணையுடன் 1927ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் கேரள கலாமண்டலம் என்ற நிறுவனத்தை பதிவு செய்தார். இதனை வளர்க்க நிதிவேண்டி மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார். கேரள அரசின் உதவியோடு லாட்டரியும் நடத்தி பணம் திரட்டினார். பின்னர் தமது நண்பர் மணக்குளம் முகுந்தராசா வழங்கிய பாரதப்புழை ஆற்றின் கரையில் செருதுருத்தி என்ற இடத்தில் இக்கலாசாலையை அமைத்தார். தாமும் அங்கேயே வசிக்கத் துவங்கினார். இவரது நினைவாக இவ்விடம் தற்போது வள்ளத்தோல் நகர் என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. ஆக்கங்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia