விக்கிரமசீலா (Vikramashila) (IAST: Vikramaśilā) பாலப் பேரரசு மற்றும் நந்தர்கள் காலத்தில் தற்கால பிகார் மாநிலத்தில் பௌத்த சமயத்தின் முக்கிய கல்வி மையமாக விளங்கியது.
பாலப் பேரரசர் தர்மபாலர் (பொ.ஊ. 783–820) விக்கிரமசீலா பௌத்த கல்வி மையத்தை நிறுவினார்.[1][2] இக்கல்வி மையத்தை தில்லி சுல்தான் முகமது பின் பக்தியார் கில்ஜியின் படைகள் பொ.ஊ. 1200 முற்றிலும் சிதைத்து விட்டது.[3]
பண்டைய விக்கிரமசீலா நகரம், தற்கால பிகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தின்ஆண்டிசக் எனும் கிராமத்தின் பெயர் கொண்டுள்ளது. இக்கிராமம் பாகல்பூரிலிருந்து கிழக்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விக்கிரமசீலாவைப் பற்றிய குறிப்புகள் திபெத்திய பௌத்த சாத்திரங்கள் மூலமாக அறியப்படுகிறது.[4]
நாளாந்தா மற்றும் தக்சசீலாவைப் போன்று விக்கிரமசீலா பௌத்தக் கல்வி மையத்தில் நூற்றிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்றனர்.
↑Scott, David (May 1995). "Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons". Numen42 (2): 141–155. doi:10.1163/1568527952598657.
↑Sanderson, Alexis. "The Śaiva Age: The Rise and Dominance of Śaivism during the Early Medieval Period." In: Genesis and Development of Tantrism,edited by Shingo Einoo. Tokyo: Institute of Oriental Culture, University of Tokyo, 2009. Institute of Oriental Culture Special Series, 23, pp. 89.