பவா நகரம்![]() பவா நகரம் (Pava), தற்போது பசில்நகர் (Fazilnagar), கௌதம புத்தர் காலத்திய பண்டைய இந்திய நகரம் ஆகும். மல்லர்களின் தலைநகராக பவா நகரம் இருந்தது. பவா நகரம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின், குசிநகருக்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாறுகௌதம புத்தர் குசிநகரில் பரிநிர்வாணம் அடைவதற்கு முன்னர் பவா நகரத்தின் சுந்தன் எனும் கொல்லன், கௌதம் புத்தருக்கு உணவு வழங்கினார்.[1] பின்னர் பவா நகரிலிருந்து புறப்பட்ட புத்தர் வழியில் கககுந்தா ஆற்றைக் கடந்து, குசிநகர் அடைந்தார்.[2] பின்னர் குசிநகரை அடைந்த புத்தர் வயிற்றுப் போக்கால் அவதி பட்டார். சுந்தன் வழங்கிய உணவால் புத்தருக்கு வயிற்று நோய் ஏற்பட்டது எனக் கருதிய அவரது சீடர்கள் சுந்தன் மீது கடும் கோபம் கொண்டனர். இதனை அறிந்த புத்தர், சுந்தன் அளித்த இறுதி உணவாலேயே தான் மகாபரிநிர்வாணம் அடையப் போகவதாக கூறி, தனக்கு இறுதி உணவு வழங்கிய சுந்தனுக்கு தனது சார்பாக நன்றி கூறி, சுந்தனை சமாதானப்படுத்துமாறு ஆனந்தரை அழைத்து கூறினார்.[3] பரிநிர்வாணம் அடைந்த புத்தரின் உடலை எரித்த சாம்பலின் ஒரு பகுதியைக் கேட்டுப் பெற்ற பவா நகரத்தின் மல்லர்கள், பவா நகரத்தில் புத்தரின் சாம்பல் மீது ஒரு தூபி எழுப்பினர்.[4] தற்போது இத்தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
பவா நகரத்தின் தற்போது பசில்நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நகரம் கல்வி, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு மையமாக விளங்குகிறது. maps.google |
Portal di Ensiklopedia Dunia