விசித்ரா
விசித்ரா (Vichithra) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் எதிர்நாயகி வேடங்களில் நடித்துள்ளனர். திரை வாழ்க்கைவிசித்ரா பத்தாவது படிக்கும் பொழுது போர்க்கொடி என்ற படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகவில்லை.[2] அதன் பிறகு இயக்குநர் ஜாதி மல்லி திரைப்படத்தில் நடித்தார். இயக்குநர் பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த திரைப்படம் நல்வாய்ப்புகளை பெற்று தந்தது.[2] கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் முத்து, ரசிகன், சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.[3] இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு புனேவில் தங்கிவிட்டார்.[4] தொலைக்காட்சித் தொடர்சன் தொலைக்காட்சியில் வேணு அரவிந்த் அவர்களுக்கு இணையாக வாழ்க்கை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.[5] மாமி சின்ன மாமி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். 2019 இல் சன் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். குடும்ப வாழ்க்கைவிசித்ரா நடிகரான வில்லியம்ஸ் என்பவரின் மகளாவார். வில்லியம்ஸ் மனிதரில் இத்தனை நிறங்களா திரைப்படத்தில் நடித்துள்ளார். பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் வேலை கிடைத்தமையால் அதிகம் நடிக்கவில்லை. விசித்திராவுக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளார்கள். விசித்திரா பத்தாவது படிக்கும் போது திரைதுறைக்கு வந்தமையால் படிப்பினை தொடர இயலவில்லை.[6] பிறகு தபால் முறை படிப்பின் மூலமாக பி.ஏ.சைக்கலாஜி, எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் ஆகிய படிப்புகளை முடித்துள்ளார்.[6] 2001 இல் ஷாஜி என்பவரை விசித்திரா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன.[6] 2011ல் இவரது தந்தை ஒரு கொள்ளை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார்.[7] திரைப்படங்கள்
தொலைக்காட்சி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia