ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்)
ராசாத்தி என்பது சன் தொலைக்காட்சியில் 23 செப்டம்பர் 2019 முதல் 3 ஏப்ரல் 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் தேவயானி, விசித்ரா, பவானி ரெட்டி, டெப்ஜனி மொடக், விஜயகுமார், செந்தில், ஆதித்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 160 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரங்கள்
முந்தைய கதாபாத்திரங்கள்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் முதலில் சின்னத் தம்பி தொடரில் நடித்த பவானி ரெட்டி இந்த தொடரில் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அத்தியாயம் 61 முதல் நடிகை தேவயானியின் வருகைக்கு பிறகு இவருக்கான முக்கியத்துவம் குறைந்ததால் இவர் இந்த தொடலிருந்து விலகினார். அத்தியாயம் 100 முதல் என்ற புதுமுக நடிகை டெப்ஜனி மொடக் என்பவர் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் தந்தையாக சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம், நந்தினி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை விசித்ராவும் நடிக்கிறார். இவர் 18 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். பிரபல நகைசுச்சுவை நடிகர் செந்தில், சுலக்சனா, பொள்ளாச்சி பாபு, புதுமுக நடிகர் ஆதித்யா , நித்யா ரவீந்தர், கீர்த்தி, ரமேஷ் பண்டிட் போன்ற பலர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம்இந்த தொடர் முதல் முதலில் 23 செப்டம்பர் 2019 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. சனவரி 28, 2020 ஆம் ஆண்டு முதல் இரவு 9:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது. மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia