விந்துப்பை
விந்துப்பை அல்லது விரைப்பை அல்லது விதைப்பை என்பது ஆண்குறியின் வால் பகுதியில் அமைந்துள்ள ஒரு உடற்கூறியல் ஆண் இனப்பெருக்க அமைப்பு ஆகும், இது தொங்கும் இரண்டு அறைகள் கொண்ட தோல் மற்றும் தசைகளால் ஆனது. விந்துப்பை நிலத்தில் வாழும் பெரும்பாலான ஆண் பாலூட்டிகளில் உள்ளது . விந்துப்பை, வெளிப்புற விந்தணு திசுப்படலம், விந்தகம், விந்து நாளத்திரள் மற்றும் விந்து வெளியேற்றக் குழாய் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இது பெரினியத்தின் ஒரு விரிவாகும். வயிற்றுத் திசுக்களுடன் விதைத் தமனி, விந்தக நரம்பு, அப்பகுதியின் பின்னல் நரம்புகள் உள்ளிட்டவை இதன் உட்குழிவுக்குள் செல்கின்றன. பெரினிய மடிப்பு என்பது ஒரு சிறிய, செங்குத்தான, சற்றே உயர்த்தப்பட்ட விந்துப்பையின் தோலாகும். இதன் கீழ் விதைப்பையின் தடுப்பு காணப்படுகிறது. இது ஒரு மெல்லிய நீளமான கோடாகத் தோன்றும். இது முழு விந்துப்பையின் முன்னும் பின்னும் நகர்ந்து இயங்கும். மனிதர்களிலும் வேறு சில பாலூட்டிகளிலும் விந்துப்பையானது பருவமடையும் போது அந்தரங்க முடியால் மூடப்பட்டிருக்கும். ஆண்குறி விறைக்கும் பொழுதும், குளிர் வெப்பநிலையிலும் விந்துப்பை பொதுவாக இறுகிக் காணப்படும். பொதுவாக பாதிப்பு ஏற்பட்டால் இரண்டும் இறுக்கப்படுவதைத் தவிர்க்க, ஒரு விந்தகம் மற்றதை விடக் குறைவாக இருக்கும்.[1] பெண்களில் லேபியோ மஜோரா எனப்படும் பெண்குறி இதழ் பகுதி விந்துப்பையுடன் உயிரியல் ரீதியாக ஒத்ததாக இருக்கிறது. பெரும்பாலான பாலூட்டிகளில் விந்துப்பைகள் இருந்தாலும், திமிங்கிலங்கள், நீர்நாய் போன்ற நெறிப்படுத்தப்பட்ட கடல் பாலூட்டிகளில் வெளிப்புற விந்துப்பைகள் இல்லை, அதே போல் நில பாலூட்டிகளின் ஆப்பிரோ தெரியா, ஜெனார்த்ரான்ஸ் வம்சாவளிகளான ஏராளமான வெளவால்கள், கொறிணிகள், மற்றும் பூச்சியுண்ணிகள் ஆகியவற்றிலும் வெளிப்புற விந்துப்பைகள் இல்லை.[2] [3] இரத்தவோட்டம்![]() தோல் மற்றும் சுரப்பிகள்
விந்துப்பையின் தோல் உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிக நிறமி கொண்டது. செப்டம் எனப்படும் பெரினிய மடிப்பு என்பது ஒரு இணைப்பு திசு சவ்வு ஆகும், இது விந்துப்பையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. [5] சமச்சீரற்ற தன்மைஒரு விந்தகம் பொதுவாக மற்றதை விட குறைவாக இருக்கும், இது பாதிப்பின் போது ஏற்படும் இறுக்கத்தைத் தவிர்க்க செயல்படும் என்று நம்பப்படுகிறது; மனிதர்களில், இடது விந்துப்பை பொதுவாக வலதுபுறத்தை விட குறைவாக இருக்கும். [1] விந்துப்பைகளின் சமச்சீரற்ற தன்மை என்பது விந்தணுக்களுக்கு மிகவும் பயனுள்ள குளிரூட்டலை செயல்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது என்பது ஒரு மாற்றுக் கருத்தாகும்.[6] உள் கட்டமைப்புகூடுதல் திசுக்கள் மற்றும் உறுப்புகள் விந்துப்பையின் உள்ளே இருக்கின்றன, மேலும் அவை பிற கட்டுரைகளில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன: வளர்ச்சி![]() பாலினங்களுக்கு இடையிலான பிறப்புறுப்பு ஓரினவியல்பிற்காலத்தில் முளையத்துகுரிய இரண்டாம் நிலை பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, ஆண் பாலியல் இயக்குநீர்கள் விந்தகத்தினால் சுரக்கப்படுகின்றன. விதைப்பையானது பெண்களின் லேபியா மஜோராவின் வளர்ச்சியுடன் ஒத்ததாக இருக்கிறது. பெரினிய மடிப்பு பெண்களில் இல்லை. கருத்தரித்த பின்னர் ஐந்தாவது வாரத்தில் முளையத்துகுரிய பெண்கள் மற்றும் ஆண்களில் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் திசுக்கள் உருவாகத் தொடங்குகின்றன. வயிற்று உட்குழிச் சவ்வுக்கு பின்னால் பாலுறுப்பு முகடானது வளர்கிறது. ஆறாவது வாரத்திற்குள், முதன்மை பாலியல் நாண்கள் எனப்படும் சரம் போன்ற திசுக்கள், விரிவடையும் பாலுறுப்பு முகடுக்குள் உருவாகின்றன. வெளிப்புறமாக, பிறப்புறுப்புப் புடைப்பு எனப்படும் வீக்கம் நிணவெலும்புச் சவ்வுக்கு மேல் தோன்றும். கருத்தரித்த எட்டாம் வாரம் வரை, இனப்பெருக்க உறுப்புகள் ஆண் மற்றும் பெண் இடையே வேறுபடுவதாகத் தெரியவில்லை. விந்து இயக்குநீர்ச் சுரப்பு எட்டாவது வாரத்தில் தொடங்குகிறது, 13 வது வாரத்தில் உச்ச நிலைகளை அடைகிறது, இறுதியில் இரண்டாவது மூன்று மாதங்களின் முடிவில் மிகக் குறைந்த மட்டத்திற்கு குறைகிறது. விந்து இயக்குநீர் சுர்ப்பதன் காரணமாக விதைப்பைக்குள் பிறப்புறுப்பு மடிப்புகள் ஏற்படுகிறது. முளையத்தின்12 வது வாரத்தில் சிறுநீர்ப்பை குழி மூடப்படும்போது விந்துப்பை மடிப்பு உருவாகிறது. [7] விந்துப்பை வளர்ச்சி மற்றும் பருவமடைதல்முளைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் விந்தகம் மற்றும் விந்துப்பை ஆகியவை உருவாகின்றன என்றாலும், பருவமடைந்த பின்னர் தான் பாலியல் முதிர்ச்சி தொடங்குகிறது. விந்து இயக்குநீரின் அதிகரித்த சுரப்பு சருமத்தில் கருமையை ஏற்படுத்துகிறது. மேலும் விந்துப்பையில் அந்தரங்க முடியின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. [8] செயல்பாடுவிந்துப்பை விந்தகத்தின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் அதை 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பாரன்ஹீட்), அதாவது 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்) உடல் வெப்பநிலைக்குக் கீழே இரண்டு அல்லது மூன்று டிகிரி பராமரிக்கிறது. அதிக வெப்பநிலை விந்தணுக்களைப் பாதிக்கிறது [9] சுற்றுப்புற வெப்பநிலையைச் சார்ந்து அடிவயிற்றில் இருந்து நெருக்கமாக அல்லது மேலும் தொலைவில் உள்ள விந்தணுக்களை நகர்த்துவதன் மூலம் விதைப்பையின் மென்மையான தசைகளால் வெப்பநிலை கட்டுப்பாடு செய்யப்படுகிறது. இது அடிவயிற்றில் உள்ள க்ரீமாஸ்டர் தசை மற்றும் டார்டோஸ் திசுப்படலம் (தோலின் கீழ் தசை திசு) மூலம் செய்யப்படுகிறது. [8] அடிவயிற்று குழிக்கு வெளியே அமைந்துள்ள விந்துப்பை மற்றும் விந்தணுக்கள் இருப்பது கூடுதல் நன்மைகளை அளிக்கும். வெளிப்புற விந்துப்பை வயிற்று அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. கருத்தரிப்பதற்கு விந்து போதுமான அளவு முதிர்ச்சியடையும் முன்பு இது விந்தகம் காலியாவதைத் தடுக்கலாம். [7] மற்றொரு நன்மை என்னவென்றால், இது ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய விந்தகம் குலுங்குதல் மற்றும் இறுக்கங்களிலிருந்து விந்தகத்தை பாதுகாக்கிறது. யானைகள், திமிங்கலங்கள் மற்றும் பைம்மாவினம் போன்ற நிலையான வேகத்தில் நகரும் விலங்குகளுக்கு விந்தகம் உண்டு ஆனால் விந்துப்பை இல்லை.[10] நஞ்சுக்கொடிசார் பாலூட்டிகளைப் போலல்லாமல், சில ஆண் பைம்மாவினங்களுக்கு ஆண்குறிக்கு முன்புறமாக ஒரு விதைப்பை உள்ளது, வெளிப்புற விதைப்பை இல்லாமலும் பல பைம்மாவினங்கள் உள்ளன மனிதர்களில், விந்துப்பையானது உடலுறவின் போது சில உராய்வுகளை வழங்கக்கூடும், இது பாலியல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மருத்துவ முக்கியத்துவம்மடியில் நிலைநிறுத்தப்பட்ட மடிக்கணினியைப் பயன்படுத்துவது விந்தணு உற்பத்தியை எதிர்மறையாக பாதிக்கும் என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. [11] நோய்கள் மற்றும் நிலைமைகள்விந்துப்பையும் அதன் உள்ளடக்கங்களும் நோய்களை உருவாக்கலாம் அல்லது காயங்களை ஏற்படுத்தலாம். மேலும் காண்க
நூலியல்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia