விஷ்ணுநாராயணன் நம்பூதிரி
விஷ்ணுநாராயணன் நம்பூதிரி (Vishnunarayanan Namboothiri, 2 சூன் 1939 - 25 பிப்ரவரி 2021) என்பவர் ஒரு இந்திய எழுத்தாளரும், மலையாள இலக்கிய அறிஞரும் ஆவார். கவிதைகளுக்காக முதன்மையாக அறியப்படும் நம்பூதிரி, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், குழந்தைகள் இலக்கியம் போன்ற பிற இலக்கிய வகைகளுக்கும் பங்களித்துள்ளார். சுதந்திரத்தே குறிச்சு ஒரு கீதம், பூமிகீதங்கள், இந்தியாயென்ன விகாரம், சாருலதா ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும். 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. அதே ஆண்டு கேரள அரசு மலையாள இலக்கியத்தின் மிக உயர்ந்த விருதான எழுத்தச்சன் விருதை வழங்கியது. வயலார் விருது, வள்ளத்தோள் விருது, ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது, ஆசான் நினைவு கவிதை விருது, சாகித்திய அகாதமி விருது, ஓடக்குழல் விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார். வாழ்க்கை வரலாறுவிஷ்ணுநாராயணன் நம்பூதிரி 1939 ஆம் ஆண்டு சூன் 2 ஆம் நாள், விஷ்ணு நம்பூதிரி, அதிதி அந்தர்ஜனம் இணையருக்கு கேரளத்தின் திருவல்லாவில் உள்ள சீரவல்லி இல்லத்தில் பிறந்தார். [1] இவர் தனது தாத்தாவிடமிருந்து வேதங்கள், புராணங்கள் மற்றும் சமஸ்கிருத பாரம்பரியக் கல்வியைப் பெற்றார். பிறகு, பெரிங்கராவில் உள்ள இளவரசர் மார்த்தாண்ட வர்மா உயர்நிலைப் பள்ளியில் கல்வியைப் பயின்றார். பின்னர், சங்கனாச்சேரியில் உள்ள செயிண்ட் பெர்ச்மான்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும், தேவகிரியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று தேர்வில் முதலிடம் பிடித்தார். [2] இவர் தனது பழைய பள்ளியான பெரிங்கரா பள்ளியில் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மலபார் கிறித்தவ கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ஆசிரியராகச் சென்றார். பின்னர், கோழிக்கோடு, கொல்லம், பட்டாம்பி, எர்ணாகுளம், திருப்பூணித்துறை, சிற்றூர், தலச்சேரி ( அரசு பிரென்னன் கல்லூரி ) [3] மற்றும் மாநில மொழிகள் கல்வி நிறுவனம் [4] போன்ற மாநிலத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர், தனது மூதாதையர் கோயிலான ஸ்ரீவல்லப கோயிலில் முதன்மை அர்ச்சகராகப் பணியாற்றினார்.[1] விஷ்ணுநாராயணன் நம்பூதிரி சாவித்திரி அந்தர்ஜனம் [5] என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு அதிதி, அபர்ணா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். [3] [6] இறப்புஇவர் 2021 பிப்ரவரி 25 அன்று திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள தைக்காட்டில் தனது வீட்டில் 81வது வயதில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.[7] இவரது வீட்டிற்கு அருகிலுள்ள சாந்திகாவதம் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.[8] கோயில் சர்ச்சைஸ்ரீவல்லப கோயிலின் முதன்மை அர்ச்சகராகப் இவர் பணியாற்றிய காலத்தில், 1997 ஆம் ஆண்டு, வேதங்கள் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டது தொடர்பாக, கோயிலின் ஒரு அதிகாரி பிரச்சினை ஒன்றை எழுப்பினார். கடலைக் கடந்து செல்வது என்பது சாத்திர சம்பிரதாயங்களின்படி ஒரு அர்ச்சகர் செய்யக் கூடாத செயல் என்று அவர் கூறினார். எனவே இவர் அர்ச்சகராக தனது பணியே மேற்கொள்வதைஅத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இருப்பினும், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தச் சர்ச்சை தணிந்தது, நம்பூதிரி மீண்டும் தனது அர்ச்சகர் பணிகளைத் தொடங்கினார்.[9] விருதுகள்விஷ்ணுநாராயணன் நம்பூதிரியின் கவிதைகள் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாக அறியப்படுகின்றன.[10] [11] [12] 1979 ஆம் ஆண்டு தனது "பூமிகீதங்கள்" என்ற கவிதைத் தொகுப்பிற்காக கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.[13] பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சாகித்திய அகாதமி 1994 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாமி விருதுக்கு இவரது உஜ்ஜயினியில் ராப்பகாலங்கள் என்ற தொகுப்பைத் தேர்ந்தெடுத்தது.[14] இடையில், இவர் தனது "முகமெவிடே?" என்ற படைப்பிற்காக ஓடக்குழல் விருதைப் பெற்றார்.[15] [16] 1996 இல் ஆசான் நினைவுக் கவிதை விருதைப் பெற்றார்.[17] மேலும் 2004 இல் கேரளச் சாகித்திய அகாதமி இவரது ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான விருதை மீண்டும் வழங்கி கௌரவித்தது.[1] 2009 இல் மாத்ருபூமி இலக்கிய விருதைப் பெற்றார். [18] மேலும் 2010 ஆம் ஆண்டு இவருக்கு சாருலதா என்ற படைப்புக்காக வயலார் விருது [19] மற்றும் வள்ளத்தோள் விருது ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றார்.[20] 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது [21] அதே ஆண்டில், கேரள அரசு இவருக்கு மாநிலத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருதை வழங்கியது. சங்கம்புழா விருது, உள்ளூர் விருது, பந்தளம் கேரளவர்மா கவிதை விருது, தேவிபிரசாதம் அறக்கட்டளை விருது (2005), ஏற்றுமானூர் சோமதாசன் இலக்கிய விருது [22], சி. வி. குன்ஹிராமன் இலக்கியப் பரிசு ஆகியவை இவர் பெற்ற மற்ற விருதுகளாகும். [1] [3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia