1772 இல் மலையாளத்தில் அச்சிடப்பட்ட நஸ்ரானிகள் ஒக்கேக்கும் அறியேன்ன சம்க்ஷேபவேதார்த்தம் என்ற முதல் புத்தகத்தின் அட்டைப் பக்கம்.
மலையாள இலக்கியம் (Malayalam literature) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் பேசப்படும் தென்-திராவிட மொழியானமலையாளத்தில் எழுதப்பட்ட இலக்கிய நூல்களைக் கொண்டுள்ளது. இந்திய மாநிலமான கேரளம் மற்றும் இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி போன்ற ஒன்றியப் பிரதேசங்களின் இணைப்பு மொழிமலையாளம், இந்தியாவின் ஆறு பாரம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.[1] 1785 இல் பாரேம்மக்கள் தோம கதனார் என்பவர் மலையாளத்தில் எழுதிய வர்த்தமானப்புத்தகம் என்ற நூல் அனைத்து இந்திய மொழியிலும் எழுதப்பட்ட முதல் பயணக் குறிப்பு எனக் கருதப்படுகிறது.[2][3] மலையாள இலக்கியத்திற்கு 6 ஞானபீட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இது அனைத்து திராவிட மொழிக்கும் வழங்கப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த விருதும், அனைத்து இந்திய மொழிக்கும் வழங்கப்பட்ட மூன்றாவது மிக உயர்ந்த விருதும் ஆகும்.[4][5]
தோற்றம்
சங்க இலக்கியம் மலையாளத்தின் பண்டைய முன்னோடியாகக் கருதப்படுகிறது.[6]மலையாள நாட்காட்டியின் தோற்றம் கி.பி. 825 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.[7][8][9] கி.பி.849/850 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கொல்லம் சிரிய செப்புத் தகடுகள் பழைய மலையாளத்தில் எழுதப்பட்ட மிகப் பழமையான கல்வெட்டு என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. பழைய மலையாளத்தில் எழுதப்பட்ட இராமசரிதம் (12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)[10] மற்றும் திருநிழல்மாலை ஆகிய இரண்டும் மலையாளத்தில் முதன்முதலில் அறியப்பட்ட இலக்கியப் படைப்புகள் ஆகும்.[11] அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், பிரபலமான பாடல் இலக்கியத்தைத் தவிர, மணிப்பிரவாள நடை ("மாணிக்க பவளம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) கவிதைகளும் செழித்தது. மணிப்பிரவாள நடை மலையாளம் மற்றும் சமசுகிருதத்தின் கலவையில் கவிதைகளைக் கொண்டிருந்தது.[12] பின்னர் சாம்பஸ் மற்றும் சந்தேசகாவியங்கள் போன்ற படைப்புகள் வந்தன, அவற்றில் உரைநடை மற்றும் கவிதை இடையிடையே இடம்பெற்றன. பின்னர், செருசேரி போன்ற கவிஞர்கள் பக்தி கருப்பொருள்கள் குறித்த கவிதைகளை அறிமுகப்படுத்தினர்.
பங்களிப்பாளர்கள்
2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் செம்மொழிகள் என்று அங்கீகாரம் வழங்கப்பட்ட மலையாள இலக்கியம்,[13]பொது ஊழி சகாப்தத்தின் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் கவிஞர்களான செருசேரி நம்பூதிரி,[14][15]துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்,[15] மற்றும் பூந்தானம் நம்பூதிரி,[16] ஆகியோரின் செல்வாக்கால் தற்போதைய வடிவத்திற்கு வளர்ந்தது.[17][18] துஞ்சத்து எழுத்தச்சன் நவீன மலையாள இலக்கியத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.[15] 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞரான குஞ்சன் நம்பியார், மலையாள இலக்கியத்திற்கு அதன் ஆரம்ப வடிவத்தில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.[15]பொன்னானி என்றும் அழைக்கப்படும் பாரதப்புழா ஆறும் அதன் துணை நதிகளும்கூட நவீன மலையாள இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளன.[19] 16-17 ஆம் நூற்றாண்டுகளில் பொது சகாப்தத்தில் இயற்றப்பட்ட முஹ்யதீன் மாலா போன்ற அரபி மலையாளத்தில் பிற முக்கியமான படைப்புகளும் இருந்தன. அரபி மலையாள இலக்கியத்தின் வளர்ச்சி இறுதியில் மாப்பிளா பாடல்களுக்கு வழிவகுத்தது. பொது சகாப்தத்தின் 16-17 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல அரபி மலையாளப் படைப்புகளில் பயன்படுத்தப்படும் சொற்களும் நவீன மலையாள மொழிக்கு மிகவும் நெருக்கமானவை. [15][20]பக்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான எழுத்தச்சன், மலையாள மொழியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரது கவிதைகள் கிளிப்பாட்டு வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[21]
↑Mathrubhumi Yearbook Plus - 2019 (Malayalam ed.). Kozhikode: P. V. Chandran, Managing Editor, Mathrubhumi Printing & Publishing Company Limited, Kozhikode. 2018. p. 450. ASIN 8182676444.
↑"Kollam Era"(PDF). Indian Journal History of Science. Archived from the original(PDF) on 27 May 2015. Retrieved 30 December 2014.
↑Mathrubhumi Yearbook Plus - 2019 (Malayalam ed.). Kozhikode: P. V. Chandran, Managing Editor, Mathrubhumi Printing & Publishing Company Limited, Kozhikode. 2018. p. 454. ASIN 8182676444.