வீரசோழபுரம் (கள்ளக்குறிச்சி)
வீரசோழபுரம் ( Veeracholapuram ) தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள தியாகதுர்கம் குறுவட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[2] [3]கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரசோழபுரம் ஊராட்சியில்[4] அமைந்த வீரசோழபுரத்தில் கரும்பு, நெல் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறது. இவ்வூரில் மணிமுத்தா ஆறு பாய்கிறது. இவ்வூரில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நில வழக்குதற்போது இக்கோயில் பூஜையின்றி, பாழ்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 34.82 ஏக்கர் நிலத்தில் (14.09 (ஹெக்டேர்), கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. ஆனால் கோயில் நிலத்தில் அரசு கை வைக்கக்கூடாது என இந்து முன்னணி அமைப்பு உள்ளிட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.[5] பின்னர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கோயில் நிலத்திற்கு சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்கும் வரை, கோயில் நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை உத்தரவை 24 சனவரி 2021 அன்று, சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.[6][7] இந்த வழக்கில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்ட பலர், அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை மதிப்பீடு செய்ய இரு குழுக்களை நீதிமன்றம் நியமித்ததுடன், நீதிமன்ற அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்திருந்தது. இரு குழுக்களின் மதிப்பீடும் குறைவாக இருப்பதாக மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் முறையிட்டபோது, 6 மதிப்பீட்டாளர்களைப் பரிந்துரைக்க அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதிப்பீட்டாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்யும் வகையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களைப் பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கோவில் அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும் நிலத்திற்கான இழப்பீட்டை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர்.[8] [9] படக்காட்சியகம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia