வெள்ளீயம்(IV) அசிட்டேட்டு
வெள்ளீயம்(IV) அசிட்டேட்டு (Tin(IV) acetate) Sn(CH3COO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளீயத்தின் அசிட்டேட்டு உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. தயாரிப்புஅசிட்டிக் நீரிலியில் உள்ள தாலியம் அசிடேட்டுடன் வெள்ளீயம்(IV) அயோடைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் எதிர்ப்பாய்வு வினை மூலம் வெள்ளீயம் (IV) அசிடேட்டு உருவாகிறது. வினை முடிந்ததும், கரைசல் செறிவூட்டப்பட்டும் குளிரூட்டப்பட்டும் படிகங்களைத் துரிதப்படுத்துகிறது, அவை நீரற்ற ஈதரால் கழுவப்பட்டு விளைபொருள் வெற்றிடத்தில் உலர்த்தப்படுகிறது:[1]
அசிட்டிக் அமிலம்-அசிட்டிக் நீரிலி கலவையில் உள்ள டெட்ராபீனைல்வெள்ளீயம் 120 பாகை செல்சியசு வெப்பநிலையில் எதிர்ப்பாய்மம் அடைந்து அளவு அடிப்படையில் உருவாகிறது::[3]
அசிட்டிக் அமிலம் மற்றும் அசிட்டிக் நீரிலியுடன் வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு வினைபுரிவதாலும் வெள்ளீயம்(IV) அசிடேட்டை உருவாக்கலாம். ஆனால் டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலியுடனான வினை அதனை ஒத்த விளைபொருளைத் தருவதில்லை. மாறாக (NO2)2[Sn(CF3COO)6] உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்வெள்ளீயம்(IV) அசிட்டேட்டு தண்ணீருடன் வினைபுரியும் போது சிதைவடைகிறது. வெள்ளீயம் ஐதராக்சைடும் அசிட்டிக் அமிலமும் உருவாகின்றன.:[1]
தயோல் போன்ற கந்தகம் கலந்துள்ள சேர்மங்களுடன் இது வினைபுரிந்து அதே போல கந்தகம் கலந்துள்ள வெள்ளீய சேர்மங்களைக் கொடுக்கிறது.[4] மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia