வெள்ளீயம்(IV) சல்பைடு(Tin(IV) sulfide) என்பது SnS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இச்சேர்மம் காட்மியம் அயோடைடின் நோக்குருவில் படிகமாகிறது. ஆறு சல்பைடு மையங்களால்[5] வரையறுக்கப்பட்டுள்ள "எண்முகத் துளைகளில் வெள்ளீயம்(IV) அயனிகள் 'அமைந்துள்ளன. இயற்கையில் இவ்வமைப்பு அரியவகை கனிமமான பெர்ண்டைட்டில்[6] காணப்படுகிறது. 2.2 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் இடைவெளி கொண்ட குறைகடத்திப் பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
வினைகள்
வெள்ளீயம்(IV) இனத்தைச் சார்ந்த கரைசல்களுடன் H2S சேர்க்கும் பொழுது இச்சேர்மம் பழுப்புநிற திண்மமாக வீழ்படிவாகிறது. காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) குறைவாக உள்ளபோது இவ்வினை தலைகீழாகிறது. படிகவடிவ வெள்ளீயம்(IV) சல்பைடு வெண்கலத்தின் நிறத்தில் இருப்பதால் அழகுக்காக மேற்பூச்சாகப் பூசப்படுகிறது[7]. இப்பயன்பாட்டால் இதை தரைவிரிப்புத் தங்கம் என்கிறார்கள்.
வெள்ளீயம்(IV) சல்பைடு சல்பைடு உப்புகளுடன் வினைபுரிந்து வரிசையாக [SnS2]m[S]2n−n என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கந்தக வெள்ளீயனேட்டுகளைத் தருகிறது. பல்படியகற்றல் வினையின் எளிய சமன்பாடு இங்கே தரப்படுகிறது.
SnS2 + S2− → 1/x[SnS2−3]x
மேற்கோள்கள்
↑ 1.01.11.2Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.