1-புரோப்பனால்
1-புரொப்பனால் (1-Propanol) CH3CH2CH2OH என்ற வாய்ப்பாட்டை உடைய முதல்நிலை மதுசாரம் ஆகும். இது ஒரு நிறமற்ற திரவம் ஆகும். இது புரோப்பேன்-1-ஆல், 1-புரொப்பைல் ஆல்ககால், n-புரொப்பைல் ஆல்ககால், மற்றும் n-புரொப்பனால் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஐசோபுரோப்பைல் ஆல்ககாலின் (புரோப்பேன்-2-ஆல், ஐசோபுரோப்பைல் ஆல்ககால், ஐசோபுரோப்பனால்) சமபகுதியம் ஆகும். இது நொதித்தல் செயல்முறைகளில் சிறிதளவு உருவாகிறது. இச்சேர்மம் மருந்தாக்கவியல் துறையில் கரைப்பானாகப் பயன்படுகிறது. இச்சேர்மம் ரெசின்கள் மற்றும் செல்லுலோசு எசுத்தர்களின் கரைப்பானாகப் பயன்படுகிறது.இது ஒரு புரோட்டிக் கரைப்பானகவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பங்களிக்கும் காரணியாகவும் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இதன் ஆவி காற்றை விட கனமானதாகும். மேலும், கண்கள், மூக்கு மற்றும் தொண்டையை லேசாக எரிச்சலூட்டும் தன்மையைக் கொண்டும் உள்ளது.[5] வேதியியல் பண்புகள்1-புரோப்பனால் முதல்நிலை மதுசாரத்தின் வினைகளைத் தருகிறது. இது அல்கைல் ஆலைடுகளைத் தருகிறது; உதாரணமாக, சிவப்பு பாசுபரசு மற்றும் அயோடின் முன்னிலையில் 1-புரோப்பைல் அயோடைடைத் தருகிறது. பாசுபரசு முக்குளோரைடு வினையூக்கி துத்தநாக குளோரைடு முன்னிலையில் 1-புரோப்பைல் குளோரைடைத் தருகிறது. இச்சேர்மம், கந்தக அமிலத்தின் முன்னிலையில் அசிட்டிக் காடியுடன் பிசர் எசுத்தராக்குதல் வினைக்குட்பட்டு புரோப்பைல் அசிட்டேட்டைத் தருகிறது. புரோப்பனால் பார்மிக் அமிலத்துடன் வினைப்பட்டு, புரோப்பைல் பார்மேட்டினைத் தருகிறது. 1-புரோப்பனால் சோடியம் டைக்குரோமேட்டுடன் வினைப்பட்டு புரோப்பியானால்டிகைடைத் தருகிறது. மேலும், இந்த வகை வினைகள் பிரிடினியம் குளோரோகுரோமேட்டைப் பயன்படுத்தும் முறை அல்லது இசுவெர்ன் ஆக்சிசனேற்ற முறை ஆகியவற்றைப் பயன்படுத்தினால் அதிக அளவு புரோப்பனால்டிகைடைத் தருமாதலால் இத்தகைய முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குரோமிக் அமிலத்துடனான ஆக்சிசனேற்றமானது புரோப்பியோனிக் அமிலத்தைத் தருகிறது. ![]() தயாரிப்புபுரோப்பியோனால்டிகைடை வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசனேற்றம் செய்து புரோப்பனால் தயாரிக்கப்படுகிறது.எத்திலீன், கார்பனோராக்சைடு மற்றும் நீரியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கோபால்ட் ஆக்டாகார்பனைல் அல்லது ரோடியம் அணைவுச் சேர்மத்தைப் பயன்படுத்தி ஆக்சோ செயல்முறையின் மூலமாக புரோப்பியானால்டிகைடு தயாரிக்கப்படுகிறது.[6] H2C=CH2 + CO + H2 → CH3CH2CH=O CH3CH2CH=O + H2 → CH3CH2CH2OH வழக்கமான ஆய்வகத் தயாரிப்பு முறையானது, n-புரொப்பைல் அயோடைடை ஈரமான வெள்ளி ஆக்சைடுடன் வினைப்படுத்தி 1-புரோப்பனாலைத் தயாரிப்பது ஆகும். 1-புரோப்பனால் சி.கஸ்டேவ் என்பவரால் 1853 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.பி.சான்செல் என்பவரால் பியூசல் எண்ணெயை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு மூலமாகப் பிரித்தெடுத்தார். உண்மையில், உருளைக்கிழங்குகள் அல்லது தானியங்கள் ஆகியவற்றை நொதித்தல் செயல்முறையில் தயாரிக்கும் போது கிடைக்கும் துணை விளைபொருளான அமினோ அமிலத்திலிருந்து கிடைக்கும் பியூசல் எண்ணெயின் மிக முக்கியமான பகுதிப்பொருள் 1-புரோப்பனால் ஆகும். இந்த செயல்முறை இப்பொழுதெல்லாம் 1-இபுரோப்பனால் தயாரிப்பதற்கான மூலமாகப் பயன்படுவதில்லை. பாதுகாப்பு1-புரோப்பனாலானது மனித உடலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தில் எத்தனாலை ஒத்ததாகக் கருதப்படுகிறது.ஆனால், 2–4 மடங்குகள் வலிமையானது எரிபொருளாக புரோப்பனால்1-புரோப்பனால் உயர் எட்டக எண் கொண்டிருப்பதால் இது உள் எரி பொறிகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இருப்பினும், புரோப்பனாலின் தயாரிப்பு மிகவும் அதிகமான செலவினை ஏற்படுத்துவதாக உள்ளதால் இது பொதுவான எரிபொருளாகப் பயன்படுத்தப்படவில்லை. புரோப்பனாலின் ஆய்வு எட்டக எண் 118 மற்றும் வெடிப்பு எதிர்ப்பு குணகம்108 ஆகவும் உள்ளது.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia