2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் (2023 Tripura Legislative Assembly election) 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைப்பெற்றது.தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாணிக் சாகா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கான வாக்குகள் 2 மார்ச் 2023 அன்று எண்ணப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி 32 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பின்னணிதிரிபுரா சட்டமன்றத்தின் பதவிக் காலம் 22 மார்ச் 2023 அன்று முடிவடைய உள்ளது.[2] 2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுவின் தலைவர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது.[3] 14 மே 2022 அன்று பிப்லப் குமார் தேவ் முதலமைச்சார் பதவியிலிருந்து விலகினார்.[4]மாணிக் சாகா புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.[5] தற்போதைய அரசியல் நிலை2022ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 7 சட்டமன்ற உறுப்பினர்களில் பாரதிய ஜனதா கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களும், திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியின் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகினர். அதில் நால்வர் திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணியிலும் (Tipraha Indigenous Progressive Regional Alliance); இருவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலும்; ஒருவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலும் இணைந்தனர்.[6][7] 8 மார்ச் 2023 அன்று தற்போதைய முதலமைச்சர் மாணிக் சாகா திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.[8] தேர்தல் அட்டவணை
தேர்தல் முடிவுகள்60 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் அளவிற்கு 32 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 1 தொகுதியையும் வென்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் மார்க்சிஸ் கட்சி 11 தொகுதிகளையும், [[இந்திய தேசிய காங்கிரசு 3 தொகுதிகளை வென்றுள்ளது. தனித்து களம் கண்ட புதிய கட்சியான திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி 13 தொகுதிகளைக் கைப்பற்றியது.[9] 8 மார்ச் 2023 அன்று தற்போதைய முதலமைச்சர் மாணிக் சாகா திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.[10]
இதனையும் காண்க
குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia