2024 ஈரான்-இஸ்ரேல் மோதல்
2024 ஈரான்-இஸ்ரேல் மோதல் (2024 Iran–Israel conflict) என்பது ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மறைமுக மோதல்களைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் தொடர்ச்சியான நேரடி மோதல்களின் நிகழ்வைக் குறிப்பதாகும். ஏப்ரல் 1 அன்று, சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தில் இஸ்ரேல் குண்டுகளை வீசி பல மூத்த ஈரானிய அதிகாரிகளைக் கொன்றது.[4] இதற்கு பதிலடியாக, ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் இஸ்ரேலிய கப்பலான எம்எஸ்சி ஏரிஸை (MSC Aries) பறிமுதல் செய்ததுடன், 13 ஏப்ரல் 2024 அன்று இஸ்ரேலுக்குள் தாக்குதல்களை மேற்கொண்டது.[5] இதனால் இஸ்ரேல், சிரியா மற்றும் ஈரான் மீது பதிலடி தாக்குதல்களை 19 ஏப்ரல் 2024அன்று தொடங்கியது.[6][7] இஸ்ரேலிய தாக்குதல்கள் குறைவாக இருந்த போதிலும் தாக்குதல்களை அதிகரிப்பதற்கான இஸ்ரேல் நடவடிக்கைகள் அடையாளம் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர். இந்த தாக்குதலுக்கு ஈரான் பதில் அளிக்கவில்லை. மேலும் இத்தகைய பதட்டங்களால் மறைமுக மோதல்கள் மீண்டும் அதிகரித்தன.[8] இஸ்ரேல் ஆதரவு நாடுகளான ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய இராச்சியம், பிரான்சு மற்றும் ஜோர்டான் இஸ்ரேலை பாதுகாக்க ஈரானிய ஆளில்லா வான்களங்களை இடைமறித்து தாக்கின. சிரியா சில இஸ்ரேலிய இடைமறிப்பான்களை சுட்டு வீழ்த்தியது. மேலும் இப்பகுதியில் உள்ள ஈரானிய ஆதரவுக் குழுவினரும் இஸ்ரேலைத் தாக்கினர்.[1] ஜூலை 31 அன்று ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் பதட்டங்கள் அதிகரித்தன.[9] சில மணி நேரம் கழித்து நிகழ்ந்த 2024 ஹரெட் ஹ்ரீக் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாத் சூக்கர் படுகொலை செய்யப்பட்டதால் ஈரானும் ஹிஸ்புல்லாவும் உறுதியாக பதிலடி கொடுக்கப்போவதாக அறிவித்தன.[10] 1 அக்டோபர் 2024 அன்று ஈரான், இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடங்கியது . பின்னணி1979 ஈரானிய புரட்சிக்குப் பிறகு ஈரான் அரசு இஸ்ரேல் மீது கடுமையான எதிர் நிலைப்பாட்டை எடுத்தது. மேலும் 1982 லெபனான் போரில் ஈரான், லெபனான் ஷியா மற்றும் பாலஸ்தீனிய போராளிகளை ஆதரித்ததால் ஒரு மறைமுக போர் சூழல் உருவானது.[11] மத்திய கிழக்கில் உள்ள மற்ற இசுலாமிய நாடுகள் மற்றும் குழுக்களிடம் ஈரான் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பெறத் தொடங்கியது. ஈரானுடன் அணிவகுத்த ஆதரவு நாடுகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக "தடுப்பாற்றல் அச்சு என்று அழைக்கப்படகிறது.[12] இந்த மோதல் சிரிய உள்நாட்டுப் போரின்போது ஈரானிய அணுசக்தி திட்டத்திற்கான இசுரேலின் முடக்க முயற்சிகளின் தொடர்ச்சியாக உருவானது. இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது முந்தைய பதட்டங்கள்7 அக்டோபர் 2023 அன்று ஈரானால் பகுதியளவு நிதி ஆதரவுடன் தொடங்கப்பட்ட பாலஸ்தீனிய போர்க்குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் கிட்டத்தட்ட 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் பொதுமக்கள் ஆவர். இத்தாக்குதலின் விளைவாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் மூண்டது.[13] இதன் தொடர்ச்சியாக ஈரானிய மறைமுக ஆதரவுப் படையான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் பூசல் உண்டானது. [14] அக்தோபர் 2023 தாக்குதலுக்குப் பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரானிய மற்றும் மறைமுக ஆதரவு துருப்புக்களை இஸ்ரேல் அடிக்கடி குறிவைத்து தாக்கத் தொடங்கியது.[15] அடுத்தடுத்த மாதங்களில் பிராந்திய போர் குறித்த அச்சம் வளரத் தொடங்கியது.[16] திசம்பர் 25 அன்று, இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் டமாஸ்கசுக்கு தெற்கே 6 கி. மீ (3.72 மைல்) தொலைவில் உள்ள சையிதா ஜைனாபில் உள்ள இல்லத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானிய தளபதியான ராசி மவுசாவி கொல்லப்பட்டார். 2020 அமெரிக்க இலக்கு வைக்கப்பட்ட வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவ தளபதி காசிம் சுலைமானி, 2024 இல் இஸ்ரேலிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட முகமது ரெசா ஜாஹெடி மரணத்திற்கு பின்னர் இசுரேலால் கொல்லப்பட்ட ஈரானின் மிக மூத்த இராணுவ அதிகாரி மவுசாவி ஆவார். இவரது படுகொலை இப்பிராந்தியத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்தன. ஜனவரி 20,2024 அன்று,ஈரானிய தளபதி சதக் ஒமிட்ஸாதேவுடன் நான்கு ஈரானிய அதிகாரிகளான அலி அகசாதே, சயீத் கரிமி, ஹொசைன் மொஹம்மதி, மற்றும் முகமது அமீன் சமாதி ஆகியோர் டமாஸ்கசின் மெஸ்சே மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடந்த கூட்டத்தின் போது கொல்லப்பட்டனர்.[17][18] இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஒரு கட்டிடம் முற்றிலுமாக அழிந்ததாகவும் இதனால் குறைந்தது 10 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்தது. காலக்கோடுஏப்ரல் 1 அன்று, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டு வீசியது. இந்தத் தாக்குதலில் பல ஈரானிய அதிகாரிகள் மற்றும் அதன் மறைமுக ஆதரவுப் போராளிகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக, குட்ஸ் படை தளபதியான முகமது ரெசா ஜாஹிடி இந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[19] கட்டிடத்தில் இருந்த ஈரானிய அதிகாரிகள் தாக்குதல் நடந்த நேரத்தில் பாலஸ்தீனிய போராளித் தலைவர்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.[20] இத்தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் இருக்கும் என ஈரான் சபதம் செய்தது, ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கும் என்று மேற்கத்திய நாடுகள் சந்தேகித்தன. தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் இஸ்ரேல் ஈரானின் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாரானது. தனது தூதரகங்களை காலி செய்ததுடன் வான்வழி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டால் சமிக்ஞைகள் கிடைக்காதபடி தனது புவியிடங்காட்டி (ஜி.பி.எஸ்) சேவைகளையும் முடக்கி வைத்தது. .[21] இஸ்ரேலை பாதுகாக்க பிரான்ஸ் தனது கடற்படையை நிறுத்தியது. சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இஸ்ரேலுக்கு தாக்குதல் குறித்த உளவுத்தகவல்களை வழங்கின. எம்எஸ்சி ஏரிஸ் கப்பல் பறிமுதல் நிகழ்வு (13 ஏப்ரல்)13 ஏப்ரல் 2024 அன்று, இசுலாமிய புரட்சிப்படையின் கடற்படை, போர்த்துகீசிய நாட்டு பதிவு செய்யப்பட்ட மற்றும் அந்நாட்டின் மதீரா சுயாட்சிப் பிரதேசத்தின் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பலான எம்எஸ்சி ஏரீஸை ஹார்முஸ் ஜலசந்தியில் பறிமுதல் செய்தது. அங்கு ஈரானிய கமாண்டோக்கள் ஐக்கிய அரபு அமீரக கடற்கரையில் சர்வதேச கடல்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் உலங்கூர்தி வழியாக இறங்கினர். பின்னர் "கடல்சார் சட்டத்தை மீறியதாக" கூறி ஈரானிய பிராந்தியத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.[22] கைப்பற்றப்பட்ட கப்பல் எம்எஸ்சி கடல்சார் நிறுவனத்திற்கு கார்டல் ஷிப்பிங்கால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் முதன்மை நிறுவனம் இஸ்ரேலைச் சேர்ததாகும். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இசுலாமிய புரட்சிப் படைக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இஸ்ரேல் கோரிக்கை விடுத்தது. இஸ்ரேல் மீது ஈரானிய தாக்குதல்கள் (ஏப்ரல் 13-14)ஏப்ரல் 13 அன்று, ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேலை சுமார் 40 ராக்கெட்டுகளால் தாக்கியது. இதற்கு பதிலடியாக லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா ஆயுத தயாரிப்பு தளத்தில் குண்டுவீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. [23] மோதலின் போது தாக்குதல் குறிப்பிடத்தக்கது என்று அல் ஜசீரா கூறியது, [24] மற்றும் போர் ஆய்வுக்கான நிறுவனம் ஈரானுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை பரிந்துரைத்தது. பின்னர், ஈரானும் அதன் பிரதிநிதிகளும் சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கினர் . [5] ஈராக்கில் ஹூதிகள், இஸ்லாமிய எதிர்ப்பு, பத்ர் அமைப்பு மற்றும் ட்ரூ பிராமிஸ் கார்ப்ஸ் ஆகியவையும் ஈரானிய கட்டளையின் கீழ் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது. சில இஸ்ரேலிய இடைமறிப்புகளை சிரியா சுட்டு வீழ்த்தியது. [1] அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஜோர்டான் ஆகியவை 100 ஈரானிய ஆளில்லா விமானங்களை இடைமறித்தன. [3] ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இறுதியில் இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் கோலன் ஹைட்ஸ் முழுவதும் பல்வேறு நகரங்களைத் தாக்கின. [25] இந்த தாக்குதலில் நெவாடிம் மற்றும் ரமோன் விமான தளங்களும் சேதமடைந்தன. [26] 33 பொதுமக்கள் காயமடைந்தனர். [27] [28] [29] இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அன்று இரவு சூழ்நிலைகளை ஆய்வு செய்தனர். ஈரான் மீதான பதிலடி தாக்குதலில் பங்கேற்க மாட்டோம் என்று அமெரிக்கா கூறியது. இஸ்ரேல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிலடி கொடுத்தால், அது இன்னும் கடுமையாகத் தாக்கும் என்று ஈரான் அச்சுறுத்தியது.[25] இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறியது.[29] அமெரிக்கா இஸ்ரேலை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு எச்சரித்தது, இஸ்ரேலிய போர் அமைச்சரவை இஸ்ரேலின் பதிலின் அளவு குறித்து வாதிட்டது.[30] அந்த வாரம் ரஃபா தாக்குதலைத் தொடங்குவதற்கான திட்டங்களை இஸ்ரேல் தாமதப்படுத்தியது, இதனால் ஒரு பதிலை தீர்மானிக்க முடியும்.[31] அடுத்த வாரத்தில் இசுரேலிய பதில் தாக்குதல்கள் குறித்து போருக்கான அமைச்சரவை விவாதங்களைத் தொடர்ந்தது. அமைச்சரவை இராணுவ மற்றும் இராஜதந்திர தெரிவுகளைப் பரிசீலித்தது, நிலைமையை அதிகரிப்பதற்கான சர்வதேச அழுத்தம் முடிவுகளை பாதிக்கும்.[32] ஏப்ரல் 18 அன்று, ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஈடாக அமெரிக்கா ஒரு ரஃபா தாக்குதலை கிரீன்லைட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.[33] ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக்கின. இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல் (19 ஏப்ரல்)ஏப்ரல் 19 2024 அன்று காலை, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக பதிலடி கொடுத்தது. இசுபகான் சர்வதேச விமான நிலையம் அதன் அருகிலுள்ள மூன்று இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது. இதில் ஒரு இராணுவத் தளமும் அடங்கும். இலக்குகளில் ஒன்று நடான்ஸ் அணுசக்தி தளத்திற்கான வானலையுணரி (ரேடார்) ஆகும். ஈரான் தனது வான் பாதுகாப்பு அமைப்பு அனைத்து இஸ்ரேலிய ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாகவும், குண்டுவெடிப்புகள் வான் பாதுகாப்பிலிருந்து வந்ததாகவும் கூறியது. ஆனால், செயற்கைக்கோள் புகைப்படங்கள் சேதமடைந்த வான் பாதுகாப்பு மின்கலம் மற்றும் ரேடார் அமைப்புக்கு சேதம் ஏற்பட்டதைக் காட்டியது.[34][35] எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் கருத்து தெரிவிக்கவோ பொறுப்பேற்கவோ இல்லை. தெற்கு சிரியாவில், சிரிய தரைப்படை தளங்கள் குறிவைக்கப்பட்டன, இது பொருள் இழப்புகளுக்கு வழிவகுத்தது.[36] ஈராக்கிலும் வெடிப்புகள் மற்றும் போர் விமானங்களின் இரைச்சல் ஒலி கேட்டன. மேலும் இஸ்ரேலிய ஏவுகணையின் பாகங்கள் மத்திய ஈராக்கில் காணப்பட்டன.[37][38] ஈரானிய அரசு ஊடகங்கள் இஸ்ரேலிய தாக்குதலை குறைத்து மதிப்பிட்டன, மேலும் ஈரானிய அதிகாரிகள் திட்டமிட்ட பதிலடி இல்லை என்று கூறினர்.[39] நாடுகளுக்கிடையேயான தாக்குதல்கள் முடிந்துவிட்டதாக அநாமதேய ஆதாரம் சிஎன்எனிடம் கூறியது.[40] இந்த தாக்குதலும் அதனைத் தொடர்ந்த ஈரானிய எதிர்வினையும் இரு தரப்பினரும் பதற்றத்தை குறைக்க விரும்புவதைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கணித்தனர்.[8] கோடை மற்றும் இலையுதிர் கால பதட்டங்கள் 2024ஹனியே மற்றும் சூகரின் படுகொலைகள் (ஜூலை 31)ஜூலை 31 அன்று, லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் உள்ள காரெட்டு கிரீக்கு மீது இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான ஃபுவாட் சூகர் படுகொலை செய்யப்பட்டார்.[41] ஈரானிய இராணுவ ஆலோசகர் மிலாத் பேடி மற்றும் பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.[42] ஷுகர் உத்தரவிட்டு பன்னிரண்டு குழந்தைகளைக் கொன்ற மஜ்தால் ஷாம்ஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது .[43] அந்நாளின் பிற்பகுதியில், ஹமாஸின் அரசியல் தலைவரான இசுமாயில் அனியே, ஈரானிய தலைநகர் தெகுரானில் அவரது தனிப்பட்ட மெய்க்காப்பாளருடன் இஸ்ரேலிய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார்.[9] ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசஸ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் இராணுவத்தால் நடத்தப்படும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அனியே கொல்லப்பட்டார்.[44] அதிகரித்த பதற்றம் (ஆகத்து-செப்டம்பர்)தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானும் ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தன. [45][10] இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, லெபனான், காசா, ஈராக், சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட “தடுப்பாற்றல் அச்சு நாடுகள்” உறுப்பினர்களால் பதிலடி தாக்குதல்கள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே ஏப்ரல் 2024 இல் இஸ்ரேல் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈடுபட்டன.[46] அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் காரணமாக பல நாடுகள் தங்கள் குடிமக்களை லெபனானை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தன. மோதலை அதிகரிக்கும் முடிவு ஈரானுக்கு சிறந்த நலன்களைத் தராது என்ற செய்தியை அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜதந்திரிகள் மூலம் ஈரானுக்கு அனுப்பி தாக்குதலைத் தடுக்க முயற்சித்தது. மேலும் ஈரானிய ஆதரவு படைகளின் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் என்றும் ஈரானுக்கு தகவல் தெரிவித்தது . பாரசீக வளைகுடா உள்ள ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் சொந்தமான 9 ஆவது கடற்படைப் பரிவின் ஒரு பகுதியாக 4,000 கடற்படையினர் மற்றும் 12 கப்பல்கள் அடங்கிய கூடுதல் படைப்பிரிவை அரேபிய பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் 1 வது தாக்குதல் அலகின் 1 வது வான்படை குழுவிலிருந்து எப்-22 தாக்குதல் வானூர்தியை நிறுத்துவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்தது, மேலும் மூன்று குளவி வகை விமானம் தாங்கி கடற்படை தாக்குதல் கப்பல்கள் (Wasp-class amphibious assault ship) இரண்டு அழிக்கும் கப்பல்கள் [கீழ்-ஆல்பா 4] மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள யுஎஸ்எஸ் அதிரடிப்படை குழுவின் ஒரு பகுதியாக 26 வது கடற்படை படையெழுச்சிக் குழு.[47][48][49] யு எஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (CVN-72) உட்பட 3 ஆவது விமானம் தாங்கி கப்பற்படைக் குழு மற்றும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான கப்பல் மற்றும் அழிக்கும் கப்பல்கள் மற்றும் 9 ஆவது விமானம் தாங்கி வான்படை ஆகியவை பசிபிக் பெருங்கடலில் இருந்து அனுப்பப்பட்டன.[47] ஆகஸ்ட் 5,2024 அன்று, ஈரான் மற்றும் ஜோர்டானின் வான்வெளியை மூடுவது அல்லது கட்டுப்படுத்துவது குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இது இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்பட்டது.[50][51] இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் பதட்டங்கள் (செப்டம்பர் 17-27)செப்டம்பர் 17 அன்று, ஹிஸ்புல்லாவால் இடம்பெயர்ந்த பொதுமக்களை வடக்கு இஸ்ரேலில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப இஸ்ரேல் ஒரு புதிய போர் இலக்கை ஏற்றுக்கொண்டது.[52] அந்த நாளின் பிற்பகுதியிலும் அடுத்த நாளிலும், ஆயிரக்கணக்கான தகவல் தொடர்பு சாதனங்கள் (பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கீஸ் உட்பட) லெபனான் மற்றும் சிரியா முழுவதும் ஒரே நேரத்தில் வெடித்தன. இது இஸ்ரேலின் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்தவர்களை தாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு செப்டம்பர் 22 அன்று நாசரேத் உட்பட வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகள் மீது ஏவுகனைத் தாக்குதல்களை நடத்தியது.[53] செப்டம்பர் 23 அன்று, பெய்ரூத்தின் தெற்கே உள்ள தாஹியில் ஹிஸ்புல்லா உயர் தளபதிகளான இப்ராஹிம் அகில் மற்றும் அகமது வெஹ்பே ஆகிய இருவரை இஸ்ரேல் கொன்றது.[54] செப்டம்பர் 23 அன்று, இஸ்ரேல் தெற்கு லெபனானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் எதிரொலியாக 500,000 லெபனிய பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர்.[55][56][57] ஹசன் நஸ்ரல்லா படுகொலை (செப்டம்பர் 27)27 செப்டம்பர் 2024 அன்று, ஹிஸ்புல்லாவின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூத்தின் புறநகரான தகியாவில் படுகொலை செய்யப்பட்டார்.[58][59] குடியிருப்பு கட்டிடங்களுக்கு அடியில் நிலத்தடியில் அமைந்துள்ள தலைமையகத்தில் ஹிஸ்புல்லா தலைவர்கள் சந்தித்துக்கொண்டபோது இந்த தாக்குதல் நடந்தது.[59] இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தெற்கு முன்னணி தளபதி அலி கராக்கி மற்றும் லெபனானில் உள்ள குட்ஸ் படையின் தளபதியும் இசுலாமிய புரட்சப்படையின் துணைத் தளபதியுமான அப்பாஸ் நில்ஃபோரோஷன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.[59][60] ஈரான் இந்த தாக்குதலைக் கண்டித்ததோடு மேலும் நஸ்ரல்லாவின் மரணத்திற்கு எவ்வாறு பதிலடி தருவது என்பது குறித்து உள் விவாதங்களை நடத்தியது. லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பு (செப்டம்பர் 30-தற்போது வரை)இஸ்ரேல் மீது ஈரானிய தாக்குதல் (அக்டோபர் 1)அக்டோபர் 1,2024 அன்று, ஈரான் இரண்டு கட்டங்களாக இஸ்ரேலை நோக்கி சுமார் 200 ஏவுகணைகளை ஏவியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia