2025 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் (2025 Indian vice presidential election) என்பது மருத்துவக் காரணங்களால் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து 2025 செப்டம்பர் 9 அன்று இந்தியாவில் நடைமுறைக்கு முன்கூட்டிய துணைத் தலைவர் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும். இந்திய அரசியலமைப்பின் 67ஆவது பிரிவு, இந்திய துணைக் குடியரசுத் தலைவருக்கு ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்க அதிகாரம் வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 68வது பிரிவின் 2ஆவது பிரிவின்படி, துணை குடியரசுத் தலைவர் பதவியிலிருக்கும் போது மரணம், பதவி விலகுதல், அல்லது நீக்குதல் அல்லது வேறு காரணங்களால் ஏற்படும் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை "விரைவில்" நடத்த அதிகாரமளிக்கின்றது. 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பதவிக்கு பதவிக்காலம் முடியும் முன்னர் முன்கூட்டிய நடைபெறும் தேர்தல் இது ஆகும்.
தேர்தல் முறை
மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் வாக்காளர்கள் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவையின் நியமன உறுப்பினர்களும் தேர்தல் நடைமுறையில் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.[1] இரகசிய வாக்கு மூலம் வாக்களிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பதவிக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் எந்தவொரு அலுவல் ரீதியான பதவியையும் கொண்டிருக்கக்கூடாது.
தேர்தல் அட்டவணை
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தேர்தல் சட்டம் 1952 இன் பிரிவு (4) இன் துணைப் பிரிவின் கீழ், இந்திய துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலுக்கான அட்டவணை இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள அறை எண் எப்-101, வசுதாவில் செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.[3]
வரிசை எண்.
நிகழ்வு
தேதி
நாள்.
1.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியீடு
7 ஆகத்து 2025
வியாழக்கிழமை
2.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள்
21 ஆகத்து 2025
வியாழக்கிழமை
3.
வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கான தேதி
22 ஆகத்து 2025
வெள்ளிக்கிழமை
4.
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்
25 ஆகத்து 2025
திங்கள்
5.
தேவைப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி
9 செப்டம்பர் 2025
செவ்வாய்
6.
தேவைப்பட்டால், எந்த தேதியில் எண்ணிக்கை எடுக்கப்படும்
சசி தரூர், மக்களவைஉறுப்பினர் (2009-தற்போது வரை) வெளியுறவு நிலைக் குழுவின் தலைவர் (2024-தற்போது வரை-மனிதவள மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் (2012–14) மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் (2009–2010)[12][13]