ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017
இந்தியா
ஆத்திரேலியா
காலம்
12 செப்டம்பர் – 13 அக்டோபர் 2017
தலைவர்கள்
விராட் கோலி
ஸ்டீவ் சிமித்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு
5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள்
ரோகித் சர்மா (296)
ஆரன் பிஞ்ச் (250)
அதிக வீழ்த்தல்கள்
குல்தீப் யாதவ் (7)
நேத்தன் கூல்ட்டர்-நைல் (10)
தொடர் நாயகன்
ஹர்திக் பாண்ட்யா (இந்)
இருபது20 தொடர்
முடிவு
3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள்
கேதார் யாதவ் (27)
மோயிசசு இன்றிக்கெசு (70)
அதிக வீழ்த்தல்கள்
ஜஸ்பிரித் பும்ரா (3)
ஜேசன் பெக்ரென்டோர்ப் (4)
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 207 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் பங்குபெற்றியது.[ 1] [ 2] [ 3] [ 4] இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) 2017 செப்டம்பரில் இத்திகதிகளை உறுதி செய்தது.[ 5] [ 6] ஒருநாள் போட்டிகளுக்கு முன்பதாக, ஆத்திரேலியா இந்தியாவின் போர்டு குடியரசுத்தலைவர் XI அணியுடன் 50-ஓவர் பயிற்சிப் போட்டியில் கலந்து கொண்டு, 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[ 7] ஒரு-நாள் போட்டித்தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐசிசி ஒரு-நாள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது.[ 8] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ICC) புதிய ஆட்ட முறைமைகளின் படி, நடுவர் முடிவு மீளாய்வு முறைமை முதற்தடவையால் இத்தொடரின் இ20ப போட்டி ஒன்றில் சோதிக்கப்பட்டது.[ 9] இ20ப தொடர் 1-1 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.[ 10]
அணிகள்
ஆகஸ்ட் 2017 ல் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் அணியில் இருந்து ஜோஷ் ஹாஸ்லேவுட்டிற்குப் பதிலாக. கேன் ரிச்சர்ட்சன் ஆத்திரேலிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[ 13] [ 14]
ஒரு-நாள் தொடர்
1வது ஒரு-நாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இல்ட்டன் கார்ட்ரைட் (ஆசி) தனது முதலாவது ஒரு-நாள் போட்டியில் விளையாடினார்.
மழை காரணமாக ஆத்திரேலிய அணிக்கான வெற்றொ இலக்கு 21 ஓவர்களுக்கு 164 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
யேம்சு பால்க்னர் (ஆசி) தனது 1,000-வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.
2வது ஒருநாள்
எ
விராட் கோலி 92 (107) நேத்தன் கூல்ட்டர்-நைல் 3/51 (10 ஓவர்கள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[ 15]
ஒரு-நாள் போட்டிகளில் ஒரே ஓவரில் 3 இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் பெற்றார்.[ 16]
3வது ஒருநாள்
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
4வது ஒருநாள்
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
டேவிட் வார்னர் (ஆசி) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[ 17] [ 18]
உமேஸ் யாதவ் (இந்) தனது 100வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[ 19]
5வது ஒருநாள்
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ரோகித் சர்மா (இந்) தனது 6,000-வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[ 20]
இருபது20ப தொடர்
1வது இ20ப
எ
விராட் கோலி 22* (14) நேத்தன் கூல்ட்டர்-நைல் 1/20 (2 ஓவர்கள்)
இந்தியா 9 இலக்குகளால் வெள்ளி (ட/லூ ) JSCA பன்னாட்டு அரங்கு, ராஞ்சி நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), செட்டிதோடி சம்சுதீன் (இந்) ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக இந்திய அணியின் வெற்றி இலக்கு 6 ஓவர்களுக்கு 48 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
2வது இ20ப
எ
கேதார் யாதவ் 27 (27) யேசன் பெரென்டோர்ப் 4/21 (4 ஓவர்கள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி பார்சப்பாரா துடுப்பாட்ட அரங்கு, குவகாத்தி நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), சி. கே. நந்தன் (இந்) ஆட்ட நாயகன்: யேசன் பெரென்டோர்ப் (ஆசி)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இவ்வரங்கில் முதற்தடவையாக பன்னாட்டுப் போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.[ 21]
3வது இ20ப
நாணயச்சுழற்சி நடத்தப்படவில்லை.
மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்