இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி26°11′14″N 91°41′30″E / 26.18722°N 91.69167°E
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி (இ.தொ.க. குவகாத்தி, Indian Institute of Technology, Guwahati, IITG) இந்திய மாநிலம் அசாமின் குவகாத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். மற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் போன்றே இதுவும் இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இது ஆறாவதாக நிறுவப்பட்டது. வரலாறு1985ஆம் ஆண்டு இந்திய அரசிற்கும் அனைத்து அசாம் மாணவர் சங்கத்திற்கும் அசாம் கிளர்ச்சியின் பின்னணியில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அசாமில் கல்வி வசதிகளை பெருக்கும் அங்கத்தின்படியும் குறிப்பாக இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்படுத்தும் அங்கத்தின்படியும் இந்தக் கழகம் உருவானது.1994ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி நிறுவப்பட்டு 1995 ஆண்டு முதல் கல்வித்திட்டங்களை துவங்கியது. மாணவர்கள் மற்ற இ.தொ.கழகங்களைப்போல ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மற்றும் பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE) மூலம் சேர்க்கப்படுகின்றனர். வளாகம்![]() இ.தொ.க குவகாத்தி இயற்கை யழகு தவழும் பின்னணியில் மிக நவீன மேம்பட்ட கட்டிடங்களில் இயங்குகிறது. நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் பிரம்மபுத்திரா ஆற்றின் வடகரையில் 700 ஏக்கர் பரப்பளவில் இவ்வளாகம் அமைந்துள்ளது.கம்பீரமான ஆறு ஒருபுறமும் மலைகளும் திறந்தவெளிகளும் மறுபுறமும் அமைந்துள்ளது. 1990களில் நிறுவப்பட்டதால் மிகவும் தற்கால மேம்பட்ட ஆய்வுக்கூடங்களையும் கணினி திறன்களும் கொண்டுள்ளது. விடுதிகள்இக்கழகம் முழுமையும் தங்கிப்படிக்கும் கல்விச்சாலையாகும். அனைத்து மாணவர்களுக்கும் தனியறை கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு உணவகங்கள், இணைய வசதிகள் முதலியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதிகள் பல்வேறு இந்திய ஆறு/துணையாறுகளின் பெயர்கள் கொண்டுள்ளன. தற்போதுள்ள விடுதிகள்:
துறைகள்இக்கழகத்தில் 13 கல்வித்துறைகளும் 11 பல்துறை மையங்களும் 3 சிறப்பு கல்லூரிகளும் பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மேம்பட்ட ஆய்வுமையங்களும் ஆய்வுக்கூடங்களும் கொண்டு விளங்குகிறது. இ.தொ.க தில்லியில் உள்ள துறைகள்:
இ.தொ.க. குவகாத்தியில் மட்டுமே இளநிலை பட்டப்படிப்பில் வடிவமைப்பிற்கான பாடதிட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இங்குள்ள வடிவமைப்புத் துறை இளநிலை வடிவமைப்பு(B.Des.) பட்டம் வழங்குகிறது. இ.தொ.க குவகாத்தியில் ஆறு ஆய்வுமையங்கள் உள்ளன:
மற்ற இ.தொ.கழகங்களைப் போலன்றி எந்த அயல்நாட்டு உதவியுடனும் இவை அமைக்கப்படவில்லை; முழுவதும் இந்திய முனைப்பு என்பது சிறப்பாகும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia