இரும்பு(III) சல்பைடு(Iron(III) sulfide) என்பது Fe2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பெர்ரிக் சல்பைடு அல்லது செசுகியுசல்பைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இரும்பு சல்பைடு (FeS), பைரைட்டு (FeS2) போன்ற சல்பைட்டுகள் அறியப்பட்டுள்ள பிற சல்பைடுகளாகும். திண்மநிலையில் உள்ள இச்சேர்மம் கருப்புநிறத் தூளாகக் காணப்படுகிறது. ஆனால் சுற்றுப்புற வெப்பநிலையால் இது மஞ்சள் பச்சைத் தூளாக சிதைவடைகிறது. இயற்கையில் காணப்படாத இச்சேர்மம் ஒப்பீட்டளவில் நிலைப்புத்தன்மையற்ற ஒரு செயற்கைச் சேர்மமாகும்.