2019 பெப்ரவரியில், தினேஸ் சந்திமல் இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன தேர்வுத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்டார்.[4] தேர்வுத் தொடரை இலங்கை அணி 2–0 என்ற கணக்கில் வென்று,[5] தென்னாப்பிரிக்காவில் தேர்வுத் தொடர் ஒன்றை வென்ற முதலாவது ஆசிய அணி என்ற சாதனையைப் பெற்றது.[6]
ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 5–0 என்ற கணக்கில் வென்றது.[7] இரண்டு ஆண்டுகளில் நான்காவது தடவையாக இலங்கை அணி ஒருநாள் தொடரை எந்த ஆட்டத்தையும் வெல்லாமல் தோல்வியடைந்தது.[8]
இ20ப தொடரில், முதலாவது போட்டிக்கு பிரான்சுவா டு பிளெசீ தென்னாப்பிரிக்காவின் தலைவராக அறிவிக்கப்பட்டார், ஏனைய இரண்டிற்கும் ஜே பி டுமினி தலைவராக அறிவிக்கப்பட்டார்.[9] தென்னாப்பிரிக்க அணி 3–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.[10]
தென்னாப்பிரிக்கா 113 ஓட்டங்களால் வெற்றி சூப்பர்ஸ்போர்ட் பூங்கா, செஞ்சூரியன் நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சோன் ஜார்ஜ் (தெஆ) ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (தெஆ)
நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தென்னாப்பிரிக்கா 6 இலக்குகளால் வெற்றி செயிண்ட் ஜோர்ஜசு பூங்கா, போர்ட் எலிசபெத் நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சோன் ஜோர்ச் (தெஆ) ஆட்ட நாயகன்: இசுரு உதான (இல)
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பிரியமல் பெரேரா (இல) தனது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
இசுரு உதான, கசுன் ராஜித்த இருவரும் இலங்கைக்காக 10-வது இலக்குக்கான அதிக ஓட்டங்களை (54) பெற்று சாதனை படைத்தார்கள்.[20]
தென்னாப்பிரிக்கா 41 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ) நியூலண்ட்சு துடுப்பாட்ட அர்ங்கு, கேப் டவுன் நடுவர்கள்: சோன் ஜார்ஜ் (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்) ஆட்ட நாயகன்: ஐடென் மார்க்ராம் (தெஆ)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தென்னாப்பிரிக்க அணியின் நேரத்தில் ஒளிவெள்ளம் பழுதடைந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.[21]
ஆட்டம் சமநிலையானது. (தென்னாப்பிரிக்கா சிறப்பு நிறைவு மூலம் வென்றது) நியூலண்ட்சு துடுப்பாட்ட அரங்கு, கேப் டவுன் நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்ட்சுடொக் (தெஆ), பொங்கானி செலி (தெஆ) ஆட்ட நாயகன்: டேவிட் மில்லர் (தெஆ)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
அவிசுக்கா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.