இலங்கைத் துடுப்பாட்ட அணி 2014 டிசம்பர் 26 முதல் 2015 சனவரி 29 வரை நியூசிலாந்தில் இரண்டு தேர்வு ஆட்டங்களிலும், ஏழு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது. சியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும், 4–2 என்ற கணக்கில் ஒருநள் போட்டியிலும் வெற்றி பெற்றது.
நான்காவது ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் காயமடைந்ததை அடுத்து, லகிரு திரிமான்ன மீதியான மூன்று போட்டிகளுக்கும் தலைமை தாங்கினார். நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடதால், கேன் வில்லியம்சன் அப்போட்டிக்குத் தலைவராக இருந்து விளையாடினார்.
இச்சுற்றுப் பயணம் முடிந்தவுடன் இலங்கை அணி 2015 உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இப்பிராந்தியத்திலேயே தங்கியிருக்கும்.
குழுக்கள்
பயிற்சிப் போட்டி
நியூசிலாந்து போர்டு லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தரிந்து கௌசல் (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.
- பிரண்டன் மெக்கல்லம் நியூசிலாந்து அணியின் அதிவிரைவான நூறு ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்தார்.[1]
இரண்டாவது தேர்வு
|
எ
|
|
|
|
|
|
|
196 (72.4 ஓவர்கள்) லகிரு திரிமான்ன 62* (144) மார்க் கிரெய்க் 4/53 (18 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- குமார் சங்கக்கார (இல) 12,000 ஓட்டங்களைப் பெற்ற 5வது துடுப்பாளராக சாதனை படைத்தார்.[2]
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் போட்டி
|
எ
|
|
மகேல ஜயவர்தன 104 (107) மிட்ச்செல் மெக்கிளெனகன் 4/36 (10 ஓவர்கள்)
|
|
|
- நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2வது ஒருநாள் போட்டி
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3வது ஒருநாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் மூன்று தடவைகள் இடைநிறுத்தப்பட்டது. 28.5 ஓவர்களின் பின்னர் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
4வது ஒருநாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
5வது ஒருநாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- லூக் ரொஞ்சி தனது முதலாவது ஒருநாள் நூறு ஓட்டங்களை எடுத்தார்.
6வது ஒருநாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.
7வது ஒருநாள் போட்டி
- நாணயச் சுஶற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
- துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது ஒருநாள் பனனாட்டுப் போட்டியில் விளையாடினார்.
- குமார் சங்கக்கார (இல) ஒருநாள் போட்டிகளில் குச்சக்காப்பாளராக அதிகளவு (473) இலக்குகளை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[3]
மேற்கோள்கள்