கண்ணபுரம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில்
விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில் கொங்கு நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ள பழைமையான சிவன் கோயில். திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கண்ணபுரம்கண்ணபுரம், காங்கேய நாட்டின் பதினான்கு பழம்பதிகளில் பதினொன்றாவதாகக் குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள கண்ணபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பிரபலமான மாரியம்மன் திருக்கோயில்.[1] கண்ணபுரம் விக்கிரம சோழீஸ்வரர் தேவ ஸ்தானகைபீதுகண்ணபுரம் விக்கிரம சோழீஸ்வரர் தேவ ஸ்தானகைபீது கிழக்கிந்திய கம்பெனியாட்சியில் முதல் சர்வேயர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்ற கர்னல் மெக்கன்சி எழுதிய ஒன்று. இது தயாரிக்கப்பட்ட தேதி 26.07.1807. தமிழக அரசின் தொல்லியல் துறையால் இது பதிப்பிக்கப்பட்டுள்ளது.[1] மெக்கன்சி ஆவணத்திலிருந்து தெரியவந்த தகவல்கள்:
மேலும் பல தகவல்கள் 26.07.1807 அன்று எழுதப்பட்ட மெக்கன்சி ஆவணத்திலிருந்து தெரிய வருகின்றன. தல வரலாறுவிக்கிரமச் சோழர் தன் பிரம்மஹத்தி தோசம் நீங்க இத்தலத்தை அமைத்து இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்து ஊரையும் அமைத்து அதற்கு விக்கிரம சோழபுரம் எனப் பெயரிட்டதாகத் தலவரலாறு கூறுகின்றது. அருணகிரிநாதர் மூன்றுமுறை இத்தலத்திற்கு வந்து திருப்புகழ் பாடியுள்ளார். அகத்திய முனிவருக்கு இறைவனார் தமது திருக்கல்யாணக் கோலம் காட்டியருளிய திருத்தலம். முதலாம் விக்கிரம சோழனாகிய கலிமூர்க்க விக்கிரம சோழர் கட்டிய திருக்கோயில். கல்வெட்டுகள்அபிமான சோழ ராசாதிராசன், வீர ராசேந்திர சோழன், விக்கிரம சோழன் ஆகிய மன்னர்களின் ஏழு கல்வெட்டுகள் உள்ளன. சிறப்பான சிற்பக்கலைத் திறன் கொண்ட திருக்கோயில். பட்டுநூல் விற்பனையாளர்களின் சிவத்தொண்டுதாமிர சாசனம் மூலம் இத்திருக்கோயிலின் அபிஷேகம் நைவேத்தியம் போன்ற செலவுகளுக்காகப் பல தேசங்களுக்குச் சென்று பட்டுநூல் வியாபாரம் செய்து வந்த தராசுரம் பட்டுநூல்காரர் பலர் சேர்ந்த அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது தெரிய வருகின்றது.[2] சிதிலமடைந்த இத்திருக்கோயிலின் புனர்நிர்மாணப்பணிகள் 2012 ஆம் வருடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia