கிறிஸ் கெயில்
கிறிஸ்டோபர் ஹென்றி கெயில் (Christopher Henry Gayle பிறப்பு 21 செப்டம்பர் 1979) ஒரு யமைக்கா துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் 1999 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்காக சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார் [1] "தி யுனிவர்ஸ் பாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட கெயில், இருபது 20 போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த மற்றும் அபாயகரமான துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் சிலரால் அனைத்துக் காலத்திற்குமான சிறந்தவராகவும் கருதப்படுகிறார்.[2][3] 2004 ஐசிசி வாகையாளர் கிண்ணம், 2012 ஐசிசி உலக இருபது20 மற்றும் 2016 ஐசிசி உலக இருபது 20 ஆகியவற்றை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிகளில் முக்கிய பங்கு வகித்தார். ஒருநாள் மற்றும் தேர்வு போட்டிகளிலும் மட்டையாளராக சிறப்பாக செயல்பட்டார். விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் தேர்வித் துடுப்பாட்டப் போட்டியில் மூன்று நூறுகள், ஒருநாள் போட்டிகளில் இரட்டை நூறு மற்றும் இ20 போட்டிகளில் சதம் ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்களை எடுத்துள்ளார். இ20 போட்டியில் 14,000 ஓட்டங்களுக்கு மேல் அடித்த மற்றும் 1,000 சிக்ஸர்களுக்கு (ஆறுகள்) மேல் அடித்த ஒரே வீரர் ஆவார்.[4][5] மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டியில் 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ள ஒரே வீரர் ஆவார்.அதன்பின் உலகக் கிண்ண வரலாற்றில் ஜிம்பாப்வேக்கு எதிராக 215 ஓட்டங்கள் எடுத்தார். 215 ஓட்டங்கள் எடுத்த இவரது ஆட்டப்பக்குதி தற்போதுவரை ஒருநாள் போட்டிகளில் இடது கை மட்டையாளரின் அதிகபட்ச தனிநபர் ஓட்டமாகும்.ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 117 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த மேற்கிந்திய வீரர் என்ற சாதனையும்,ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்தில் அதே அணிக்கு எதிராக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த மேற்கிந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். எதிர்ச்சுழல் பந்துவீச்சாளராக 200 இலக்குகளுக்கும் மேல் கைப்பற்றியுள்ளார். 2011 இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது பெற்றார் மற்றும் 2012 இல் ஆரஞ்சு தொப்பியை வைத்திருந்தார். 23 ஏப்ரல் 2013 அன்று, ஐபிஎல்- ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 66 பந்துகளில் 175 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், இ20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்டம் எடுத்தவர் , விரைவாக நூறு ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடும் போது இ20 போட்டியில் அதிவேக 50 ஓட்டங்கள் எடுத்த சாதனையையும் சமன் செய்தார்.[6] ஆரம்பாகால வாழ்க்கைகெயில் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை யமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள இலூகாசு துடுப்பாட்டச் சங்கத்தில் தொடங்கினார்.[7] இந்தச் சங்கம் பற்றி கெயில் பின்வருமாறு கூறினார்: "இலூகாசு சங்கம் இல்லையென்றால், இன்று நான் எங்கே இருந்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. தெருக்களில் இருந்திருக்கலாம்." [7] இலூகாசுதுடுப்பாட்டச் சங்க நர்சரிக்கு கெயிலின் நினைவாக பெயரிடப்பட்டது.[7] சர்வதேச போட்டிகள்ஆரம்பகாலங்களில்1998 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிக ஓட்டங்கள் அடித்தார்.[8] 1998 இல் தனது 19ஆவது வயதில் யமைக்காவுக்காக முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பதினொரு மாதங்களுக்குப் பிறகு 1999 இல் தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும், ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் விளையாடினார். கெயில் ஒரு அபாயகரமான மட்டையாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். வளர்ச்சி2002ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக மூன்று நூறு ஒட்டங்களை எடுத்தார். இதன்மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாராவிற்கு அடுத்தபடியாக ஒரு நாட்காட்டி ஆண்டில் 1,000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.[9] ஒரு நாள் போட்டிக்கான வரலாற்றில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் 150க்கும் மேலான ஓட்டங்களை எடுத்த ஆறு வீரர்களில் இவரும் ஒருவர். 2005 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் தேர்வுப் போட்டியில் விளம்பரதாரர் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து ஆறு வீரர்களுடன் இவரும் நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தேர்வுப் போட்டியில் 317 ஓட்டங்களை எடுத்தார்.மகேல ஜயவர்தன 374 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையினை முறியடித்தார். தொடரின் மற்றொரு போட்டியில், கெய்ல் தலைசுற்றல் புகார் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது, மீண்டும் தனது ஆட்டப்பகுதியின் போது தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் இருப்பதாகக் கூறினார். சிறிது நேரம் மைதானத்தை விட்டு வெளியேறினார், போட்டிக்குப் பிறகு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், அங்கு இவருக்கு பிறவி இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது, இதனால் இதயத் துடிப்பு குறைகிறது . அந்த குறைபாட்டை சரி செய்ய தொடரை தொடர்ந்து இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.[10][11] ஒர் ஆட்டப்பகுதியில் துவக்கவீரராகா களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காத நான்காவது மேற்கிந்திய வீரர் கெய்ல் ஆவார்.[12] ஒய்வுநவம்பர் 6, 2021இல், கெய்ல் தனது கடைசியாக ப இ20 போட்டியினை ஆத்திரேலியாவுக்கு எதிராக சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கில் இருப்பினும் சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை இன்னும் அறிவிக்கவில்லை. ஜமைக்காவில் உள்ள இரசிகர்கள் முன்பாக ஓய்வு பெற விரும்பினார்.[13] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia