கூட்டு கணினி குற்றச் செயலகம்கூட்டு கணினி குற்றச் செயலகம் (Joint Cipher Bureau) இந்தியப் பாதுகாப்புப் படைகள் கூட்டாக இணைந்து, இந்திய இராணுவத்திற்கு எதிரான கணினி குற்றங்களை எதிர்கொள்ளும் அமைப்பாகும். கூட்டு கணினி குற்றச் செயலகத்துடன் இந்திய உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்புகள் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. மேலும் பிற இராணுவ சேவை அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது. இதன் தந்திரோபாய நுண்ணறிவை வழங்கும் பெரும்பாலான கருவிகள் உருசியாவைச் சேர்ந்தவை ஆகும். இதில் சிறப்பு திசை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் அடங்கும். இவ்வமைப்பின் முதன்மையான பணி இரகசிய வார்த்தைகளை உருவாக்குவதும்[1],சமிக்கை நுண்ணறிவு, சங்கேத வார்த்தைகளை படித்தறிவதும் ஆகும்.[2] இதன் நடவடிக்கைகளை இராணுவப் பாதுகாப்பு புலனாய்வு முகமை மற்றும் இராணுவப் புலனாய்வு இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய இராணுவத்தின் பொறியாளர் சேவைப் பிரிவைப் சேர்ந்தவர்கள் ஆவார்.[3] அதிகார அமைப்புஇதன் அதிகாரிகளை இரண்டு குழுக்களாகப் பிரிப்பர். குழு ஏ
குழு பி
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia