சீரியம் மோனோசல்பைடு

சீரியம் மோனோசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீரியம் சல்பைடு (CeS), சீரியம்(3+) முச்சல்பைடு
இனங்காட்டிகள்
12014-82-3
InChI
  • InChI=1S/Ce.S
    Key: INJMJSIZAXAEMH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • S=[Ce]
பண்புகள்
CeS
வாய்ப்பாட்டு எடை 172.18 g·mol−1
தோற்றம் Yellow crystalline solid
அடர்த்தி 5.9 கி/செ.மீ3
உருகுநிலை 2,445 °C (4,433 °F; 2,718 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீரியம் மோனோசெலீனைடு
சீரியம்மோனோதெல்லூரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சீரியம் மோனோசல்பைடு (Cerium monosulfide) என்பது CeS என்ற என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் இருமச் சேர்மமான இது சீரியமும் கந்தகமும் வினை புரிவதால் உருவாகிறது.[1][2][3][4] அறியப்பட்டுள்ள சீரியத்தின் சல்பைடு உப்புகளில் மிகவும் எளிய உப்பு சீரியம் மோனோசல்பைடாகும்.

தயாரிப்பு

  • 2450 °செல்சியசு வெப்பநிலையில் தூய சீரியம் உலோகத்தையும் கந்தகத்தையும் விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினைபுரியச் செய்தால் சீரியம் மோனோசல்பைடு உருவாகும்:
Ce + S -> CeS
  • இருசீரியம் முச்சல்பைடுடன் சீரியம் ஐதரைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் சீரியம் மோனோசல்பைடு உருவாகும்:[5]
Ce2S3 + CeH2 -> 3CeS + H2

இயற்பியல் பண்புகள்

சீரியம் மோனோசல்பைடு நீரில் கரையாது, மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. 2445 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்கும்.

வேதிப் பண்புகள்

சீரியம் மோனோசல்பைடு உலோகங்களின் மீது ஈரமாக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் இது பிளாட்டினத்தைத் தவிர மற்ற உலோகங்களுக்கு ஒப்பீட்டளவில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. மேலும் பிளாட்டினத்துடன் தீவிரமாக வினைபுரிந்து பிளாட்டினம் சீரியம் என்ற இடை உலோக கலவையை உருவாக்குகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 105. ISBN 978-1-4398-1462-8. Retrieved 4 April 2023.
  2. Pauling, Linus (24 November 2014). General Chemistry (in ஆங்கிலம்). Courier Corporation. p. 635. ISBN 978-0-486-13465-9. Retrieved 4 April 2023.
  3. Kariper, İshak Afşin (1 December 2014). "Synthesis and characterization of cerium sulfide thin film" (in en). Progress in Natural Science: Materials International 24 (6): 663–670. doi:10.1016/j.pnsc.2014.10.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:1002-0071. 
  4. "Cerium Monosulfide". American Elements. Retrieved 4 April 2023.
  5. 5.0 5.1 Gibbard, Kevin B.; Allahar, Kerry N.; Kolman, David; Butt, Darryl P. (September 2008). "Kinetics of thermal synthesis of cerium sulfides". Journal of Nuclear Materials 378 (3): 291–298. doi:10.1016/j.jnucmat.2008.05.013. Bibcode: 2008JNuM..378..291G. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311508003565. பார்த்த நாள்: 4 April 2023. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya